அம்ரித் பாரத் ரயில்கள் தமிழகத்திற்கு கிடைத்த பொங்கல் பரிசு: நயினார்
அம்ரித் பாரத் ரயில்கள் தமிழகத்திற்கு கிடைத்த பொங்கல் பரிசு: நயினார்
UPDATED : ஜன 14, 2026 03:27 PM
ADDED : ஜன 14, 2026 03:25 PM

சென்னை: தமிழகம்-மேற்குவங்கத்திற்கிடையே 3 அம்ரித் பாரத் ரயில்கள் இயக்க ஒப்புதல் கிடைத்தது தமிழகத்திற்கான பொங்கல் பரிசு என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நகேந்திரன் கூறினார்.
அவரது அறிக்கை:
நமது மாநிலத்தின் உட்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக, தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்திற்கு இடையே 3 அம்ரித் பாரத் ரயில்களை இயக்க ஒப்புதல் அளித்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக்கும், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கும் நன்றி.
நியூ ஜல்பாய்குரி - திருச்சி, தாம்பரம் - சந்திரகாச்சி, நாகர்கோவில் - நியூ ஜல்பாய்குரி உள்ளிட்ட பகுதிகளின் வழியாகச் செல்லும் இந்த அம்ரித் பாரத் ரயில்கள் கூடிய விரைவில் துவங்கவிருப்பதாகவும், இதன் மூலம் பயணிகளின் பயணநேரம் குறைக்கப்படுவதோடு மலிவான விலையில் தரமான சேவை மக்களுக்குக் கிடைக்கும் எனவும் வெளியாகியுள்ள தகவல்கள், தமிழகத்திற்கான தித்திப்பான பொங்கல் பரிசு என்பதில் துளியும் ஐயமில்லை.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

