ADDED : ஜன 03, 2024 11:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆன்மிக மண்ணாக உள்ள தமிழகத்தில் எப்படி சனாதனத்தை அழிக்க முடியும்? 'சுண்டக்கா' அமைச்சர் உதயநிதியால் சனாதனத்தை அழிக்க முடியாது.
இயற்கைக்கே பிடிக்காததால் தான், தி.மு.க., இளைஞர் அணி மாநாடு, மூன்று முறை தேதி மாற்றப்பட்டுள்ளது.
தமிழகம் தனி நாடு; ஒன்றிய அரசு என்று கூறி வந்த முதல்வர் ஸ்டாலின், திருச்சியில் நடந்த விமான நிலைய விரிவாக்க விழாவில் பேசும்போது, பாரத பிரதமர், இந்திய பிரதமர் என பேசுகிறார். மீண்டும் பிரதமராக மோடி வருவது தெரிந்து தான், இப்படி பேசியுள்ளார்.
போலீசாருக்கு வேலைப்பளு அதிகளவில் உள்ளது. பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும், எட்டு மணி நேர வேலை, கூடுதல் போலீசார் நியமிக்கப்படும். போலீசாருடன் அனுசரித்து அரசியல் பணி மேற்கொள்ள வேண்டும் என, கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
அண்ணாமலை,
தமிழக பா.ஜ., தலைவர்