sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க., கொடி கட்டிய காரில் பெண்களை துரத்தும் சம்பவம்; பார்க்கும்போதே நெஞ்சம் பதறுகிறது: அண்ணாமலை

/

தி.மு.க., கொடி கட்டிய காரில் பெண்களை துரத்தும் சம்பவம்; பார்க்கும்போதே நெஞ்சம் பதறுகிறது: அண்ணாமலை

தி.மு.க., கொடி கட்டிய காரில் பெண்களை துரத்தும் சம்பவம்; பார்க்கும்போதே நெஞ்சம் பதறுகிறது: அண்ணாமலை

தி.மு.க., கொடி கட்டிய காரில் பெண்களை துரத்தும் சம்பவம்; பார்க்கும்போதே நெஞ்சம் பதறுகிறது: அண்ணாமலை

29


ADDED : ஜன 29, 2025 01:57 PM

Google News

ADDED : ஜன 29, 2025 01:57 PM

29


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'சென்னை ஈ.சி.ஆரில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது. தி.மு.க., கொடி கட்டிய காரில் பெண்களை துரத்திச் சென்ற வீடியோவை காணும்போது நெஞ்சம் பதறுகிறது' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னை சேத்துப்பட்டில் அண்ணாமலை அளித்த பேட்டி: மாநில அரசு சரியான தகவல் கொடுக்காமல் டங்ஸ்டன் சுரங்கம் வருவதற்கு காரணமாக இருந்தும் கூட மக்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு ரத்து செய்தது. டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் பல அரசியல் கட்சி தலைவர்கள் அரசியல் ஆக்கி கொண்டு இருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தீர்மானம் போட்டதால் நடந்ததாக கூறுகிறார். இதற்கு முன் சட்டசபையில் போட்ட தீர்மானம் எல்லாம் நடந்து இருக்கிறதா?

பாதுகாப்பில்லை

டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு காரணம் பிரதமர் மோடி தான். நாளை அரிட்டாப்பட்டி சென்று விவசாயிகளை சந்திக்கிறோம்.

சென்னை ஈ.சி.ஆரில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. போலீஸ் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும். பெண்களுக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது. பெண்களை தி.மு.க., கொடி கட்டிய காரில் துரத்தி சென்ற வீடியோவை பார்க்கும் போது நெஞ்சு பதறுகிறது. போலீசாருக்கு எந்த வித உபகரணங்களும் கொடுக்காமல் தி.மு.க., அரசு இருக்கிறது.

அச்சுறுத்தல் கூடாது

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ஒரு ஆணி துரும்பை கூட கிள்ளி போடாமல் தி.மு.க., அரசு இருக்கிறது. செய்தியாளர்கள் தொலைபேசியை வாங்கி பார்ப்பதை முட்டாள் தனமான வாதமாக நான் பார்க்கிறேன்.

செய்தியாளர்களை அச்சுறுத்தக்கூடாது. செய்தியாளர்களிடம் ஆதாரம் கேட்பதில்லை. ஒரு செய்தியாளர்களை அழைத்து அச்சுறுத்தல் செய்தால், தமிழகத்தில் நடக்கும் எந்த விதமான விஷயங்களையும் வெளியே கொண்டு வர பயப்படுவார்கள்.

பகல் கனவு

செய்தியாளர்களின் மொபைல் போனை பறிமுதல் செய்து, சோதனை செய்வது ஊடகங்களுக்கு எதிராக தி.மு.க.,வின் மனப்பான்மையை காட்டுகிறது. முதல்வர் ஸ்டாலின் பகல் கனவில் இருக்கிறார்.

அரிட்டாப்பட்டியில் முதல்வர் ஸ்டாலினுக்கு நடந்த பாராட்டு விழாவிற்கு, மக்களுக்கு தலா. ரூ.300 கொடுத்து அழைத்து வந்துள்ளனர். தி.மு.க., ஆட்சி மீண்டும் வர வாய்ப்பு இல்லை.

நாளை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு நடக்கும் பாராட்டு விழாவை பாருங்கள். மக்கள் தானாக வந்து ஆதரவு அளிப்பார்கள்.

சாத்தியக்கூறு

நாடக கம்பெனி போல தான் தி.மு.க., ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. எந்த காரணத்திலும் அவர்கள் ஆட்சிக்கு திரும்ப வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பது என்னுடைய கருத்து மட்டுமல்ல தமிழக மக்களின் பொதுவான கருத்து. கவர்னர் இருந்தால் தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று சொன்ன தி.மு.க., தற்போது ஏன் கவர்னருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுகிறீர்கள். நீங்கள் போடுவது டிராமா தான்.

கோழைத்தனம்


இரட்டை வேடம் போடும் தி.மு.க.,வை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழகத்தில் கல்வித்திறன் சரிந்துள்ளது என்பதில் என்ன தவறு இருக்கிறது. தி.மு.க.,வினர் செய்யும் செயல் கோழைத்தனம்.முதல்வர் ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால், மாவட்டம் மாவட்டமாக எவ்வளவு குற்ற சம்பவங்கள் நடந்துள்ளது என்பதை கணக்கு எடுத்து வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டியது தானே?

100 சதவீதம்

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளது உண்மை.

இதற்கு முதல்வர் ஸ்டாலின் தரவுகள் அடிப்படையில் பதில் அளிக்க வேண்டும். தமிழகத்தில் மாவட்ட தலைவர்களை தேர்வு செய்துவிட்டேன். தேசிய தலைவர் என்றைக்கு மாநில தலைவர் தேர்தல் நடத்த வேண்டும் என நினைக்கிறாரோ, அதற்கு தமிழக பா.ஜ., தயாராக இருக்கிறது. இதற்கு காரணம் மாவட்ட தலைவர்கள் நியமனத்தை 100 சதவீதம் முடித்துவிட்டோம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.






      Dinamalar
      Follow us