ADDED : மே 20, 2025 06:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின்படி, 2024- - 25ல், தமிழகத்தின் வேளாண் வளர்ச்சி, மைனஸ் 0.09 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துஉள்ளது. இது கடும் கண்டனத்திற்கு உரியது.
தமிழகத்தில் வேளாண் தொழில், எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதற்கு, இதை விட சிறந்த சான்று தேவையில்லை. இதற்கு தி.மு.க., அரசே காரணம். வேளாண்மை செய்தால் லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை, விவசாயிகளுக்கு ஏற்படுத்த வேண்டும். அதை செய்ய, தி.மு.க., அரசு தவறி விட்டது. விவசாயிகள் முன்னேறாமல், தமிழகம் முன்னேறாது. எனவே, வேளாண் துறை வளர்ச்சிக்கு, சிறப்பு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.
- அன்புமணி
பா.ம.க., தலைவர்