sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அண்ணாமலை பல்கலை. மாணவர்களுக்கு உதவித்தொகையை உடனே வழங்கவேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

/

அண்ணாமலை பல்கலை. மாணவர்களுக்கு உதவித்தொகையை உடனே வழங்கவேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

அண்ணாமலை பல்கலை. மாணவர்களுக்கு உதவித்தொகையை உடனே வழங்கவேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

அண்ணாமலை பல்கலை. மாணவர்களுக்கு உதவித்தொகையை உடனே வழங்கவேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்


ADDED : அக் 15, 2025 11:35 AM

Google News

ADDED : அக் 15, 2025 11:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அண்ணாமலை பல்கலை. மாணவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள கல்வி உதவித்தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை;

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ 2ம் ஆண்டு பயிலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு முதலாம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகையாக தலா ரூ. 52,980 வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.

முதலாம் ஆண்டின் இறுதியில் இந்த உதவித் தொகை முழுமையாக வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.52,980 வழங்குவதற்கு பதிலாக இதுவரை மொத்தம் ரூ.3025 மட்டும் தான் வழங்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள ரூ.49,955 இன்னும் வழங்கப்படவில்லை.

அதனால், அந்த மாணவர்களால் 2ம் ஆண்டு கல்விக் கட்டணம் செலுத்த முடியவில்லை. உடனடியாக கல்விக் கட்டணத்தை செலுத்தும் படி பல்கலைக்கழகம் கெடுபிடி காட்டி வருகிறது. பல்கலை,யில் எம்.பி.ஏ 2ம் ஆண்டு பயிலும் பிற இட ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்களுக்கு உதவித் தொகை முழுமையாக வழங்கப்பட்டு விட்டது.

ஆனால், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மட்டும் இன்னும் கல்வி உதவித் தொகை வழங்கப்படாததற்கு, இதற்கு பொறுப்பான பல்கலைக்கழக அதிகாரிகளும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலத்துறை அதிகாரிகளும் தான் காரணம் ஆவர்.

ஏழை மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஒரே ஆதாரம் இத்தகைய கல்வி உதவித் தொகைகள் தான். அவை குறித்த காலத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை என்றால் அவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படும். இதை உணர்ந்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ 2ம் ஆண்டு பயிலும் மாணவர்கள் உள்பட இதுவரை கல்வி உதவித் தொகை வழங்கப்படாத அனைத்து மாணவர்களுக்கு உடனடியாக அதை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.






      Dinamalar
      Follow us