உங்களுக்கு 'ஓகே'னா எங்களுக்கும் 'ஓகே': தலித்தை முதல்வராக்க அன்புமணி விதித்த நிபந்தனை
உங்களுக்கு 'ஓகே'னா எங்களுக்கும் 'ஓகே': தலித்தை முதல்வராக்க அன்புமணி விதித்த நிபந்தனை
ADDED : ஆக 15, 2024 04:07 PM

சென்னை: “பட்டியலின சமூகத்தினர் எங்களுக்கு ஆதரவு கொடுத்தால் தலித் சமுதாயத்தை சேர்ந்தவரை முதல்வர் ஆக்குவோம்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சமீபத்தில், ''எந்த சூழலிலும், எந்த காலத்திலும் ஒரு தலித், ஒரு மாநிலத்தின் முதல்வராக முடியாது'' எனப் பேசியிருந்தார். இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர் கூறியதாவது: ஒட்டுமொத்த பட்டியலின சமூகத்தினர் எங்களுக்கு ஆதரவு கொடுத்தால், தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை முதல்வர் ஆக்குவோம்.
இது வெறும்பேச்சு அல்ல. எங்களுக்கு முதன்முதலில் மத்திய அமைச்சர் பதவி கிடைத்தவுடன் பட்டியலின சமூகத்தை சேர்ந்த ஒருவருக்குதான் அந்த பதவியைக் கொடுத்தோம். பட்டியலின மக்களுக்கு அதிகமாக செய்தது பாமக தான். நாங்கள் 1998ல் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவரை மத்திய அமைச்சராக்கினோம். ஆனால் திமுக 1999ல் தான் ஆ.ராசாவை மத்திய அமைச்சராக்கியது. இவ்வாறு அவர் கூறினார்.