தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மீனாட்சி அம்மன் கோவிலில் ஆந்திர பக்தர் திடீர் மரணம்

 மீனாட்சி அம்மன் கோவிலில் ஆந்திர பக்தர் திடீர் மரணம்

 மீனாட்சி அம்மன் கோவிலில் ஆந்திர பக்தர் திடீர் மரணம்

2


ADDED : ஆக 16, 2026 11:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2026 11:13 PM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த ஆந்திர பக்தர் மாதம்ஷெட்டி குருவய்யா, 75, திடீரென உயிரிழந்தார்.

ஆந்திர மாநிலம், நலகொண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாதம் ஷெட்டி குருவய்யா. இவர், குடும்பத்துடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, நேற்று காலை வந்தார். அம்மன், சுவாமியை தரிசித்துவிட்டு, சுவாமி சன்னிதி கொடிமரம் அருகே அமர்ந்து பிரசாதம் சாப்பிட்டபோது, மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, மேற்கு சித்திரை வீதியில் உள்ள, கோவில் முதலுதவி மையத்திற்கு அழைத்து சென்ற நிலையில், அங்கு இறந்தார். அவர், இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநில பொருளாளர் ஆதிசேஷன் கூறுகையில், ''சித்திரை வீதியில் கோவில் ஆம்புலன்ஸ் நீண்ட நாட்களாக நிறுத்தப்படவில்லை. இருந்திருந்தால், உடனடியாக முதலுதவி மையத்திற்கு அழைத்து சென்று, உயிரை காப்பாற்றி இருக்கலாம்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us