ADDED : ஆக 26, 2026 03:20 AM
சென்னை: பரந்துார் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்வதாக, முதல்வர் விஜய் அறிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சமூக வலைதளமான, 'எக்ஸ்' தளத்தில், ஒருவர், ஆந்திரா அமைச்சர் நரே லோகேஷை 'டேக்' செய்து, 'இன்று சந்திரபாபு நாயுடு, தன்னை மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்வார்.
'அவர் மீண்டும் ஒரு முறை ஆட்சிக்கு வந்தால், சென்னை மக்களுக்காக, ஸ்ரீ சிட்டியில் ஒரு புதிய விமான நிலையம் அமைப்பதை உறுதி செய்வார்' என, பதிவிட்டு இருந்தார்.
அதற்கு நரே லோகேஷ் அளித்த பதிலில், 'ஆந்திர பிரதேசத்தில், ஏற்கனவே அமராவதி, போலவரம் இடையே மூன்று பொருளாதார மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் ஏராளமாக உள்ளன. நீங்கள் குறிப்பிட்டது, எங்கள் முன்னுரிமை பட்டியலில் இல்லை.
'எனவே, இதை நாங்கள் மரியாதையுடன் தவிர்க்கிறோம்' என, 'ஸ்மைலி எமோஜி' உடன் குறிப்பிட்டுள்ளார். நரே லோகேஷின் இந்த பதிவை, பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
