முதல்வருக்கு ஆஞ்சியோ பரிசோதனை; அமைச்சர் துரைமுருகன் தகவல்
முதல்வருக்கு ஆஞ்சியோ பரிசோதனை; அமைச்சர் துரைமுருகன் தகவல்
ADDED : ஜூலை 24, 2025 11:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. அவர் நலமுடன் இருக்கிறார் என அமைச்சர் துரைமுருகன் தகவல் தெரிவித்துள்ளார்.
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில், 4வது நாளாக தங்கி முதல்வர் ஸ்டாலின் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கிருந்தபடி, அரசு பணிகளை கவனித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று (ஜூலை 24) சென்னையில் நிருபர்கள் சந்திப்பில், முதல்வர் உடல்நிலை குறித்து எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பதில்:
முதல்வருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. அவர் நலமுடன் இருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் எப்பொழுது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து மருத்துவர்கள் சொல்வார்கள், என்றார்.

