sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஊழல்வாதிகளை தண்டிக்க வலுவான லோக்பால்: ஹசாரே

/

ஊழல்வாதிகளை தண்டிக்க வலுவான லோக்பால்: ஹசாரே

ஊழல்வாதிகளை தண்டிக்க வலுவான லோக்பால்: ஹசாரே

ஊழல்வாதிகளை தண்டிக்க வலுவான லோக்பால்: ஹசாரே


ADDED : ஜூலை 28, 2011 05:41 AM

Google News

ADDED : ஜூலை 28, 2011 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஊழல்வாதிகளை தண்டிக்க வலுவான லோக்பால் மசோதாவை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்றும், அவ்வாறு கொண்டுவரப்படும் பட்சத்தில் இந்த நாடு மிகுந்த நன்றிகடன்பட்டதாக இருக்கும் என பிரபல காந்திவாதி அன்னா ஹசாரே கூறினார்.

அரசியல்வாதிகள் உள்ளி்ட்ட மேல்மட்டத்தில் உள்ளவர்களை விசாரிக்க லோக்பால் ம‌ாசோதா அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள லோக்பால் ம‌சோதா வரைவு கமிட்டியில், சமூக ஆர்வலர்கள் தரப்பில் காந்தியவாதி அன்னா ஹாசாரே, மூத்த வழக்கிறஞர்கள் சாந்திபூசன், பிரசாந்த்பூசன், கேஜ்ரிவால் உள்ளிட்ட 5 பேரும்,மத்திய அரசு சார்பில் பிரணாப்முகர்ஜி, சிதம்பரம், கபில்சிபில் உள்ளிட்டவர்களும் இடம் பெற்றுள்ளனர். வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பார்லி. மழைக்கால கூட்டத்தில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் , டில்லியில் செய்தியாளர்களுக்கு காந்தியவாதி அன்னா ஹசாரே கூறியதாவது: ஊழலை ஒழித்துக்கட்டவும் ,ஊழல்வாதிகளை தண்டிக்கவும் ஒரு வலுவான லோக்பால் சட்டம் தேவை, அதனை உடனடியாக கொண்டுவர இதுதான் சரியான தருணம், இந்திய வராலாற்றில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தனது சந்தர்ப்பத்தை இத்தருணத்தில் நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே நாட்டில் ஒரு வலுவான அமைப்பாக லோக்பால் மசோதாவை மத்திய அமைச்சரவை கொண்டுவர வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். அப்படி கொண்டுவரும் பட்சத்தில் இந்த நாடே மத்திய அரசுக்கு நன்றிகடன்பட்டதாக இருக்கும்.இவ்வாறு ஹசாரே கூறினார்.










      Dinamalar
      Follow us