ADDED : ஆக 18, 2011 07:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : வலுவான லோக்பால் மசோதா அமைய தனக்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து மக்களுக்கும் நன்றி என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, திகார் சிறையில் உள்ள அவர் கூறியுள்ளதாவது, நாளை, தான் பொதுமக்களை சந்திக்க உள்ளேன். எனது உடல்நிலையில் எவ்வித குறைபாடுமில்லை. நான் நலமாகவே உள்ளேன். என் உடல்நிலை குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். வலுவான லோக்பால் மசோதா அமையும் வரை எனது போராட்டம் தொடரும். எனக்கு ஆதரவாக நிற்கும் மக்களை பார்த்து நான் உளமகிழந்துள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.

