அண்ணா பல்கலை குற்றவாளி தி.மு.க.,வைச் சேர்ந்தவர்தான்; அதான் ஆதாரம் இருக்கே; சீமான்
அண்ணா பல்கலை குற்றவாளி தி.மு.க.,வைச் சேர்ந்தவர்தான்; அதான் ஆதாரம் இருக்கே; சீமான்
ADDED : டிச 29, 2024 10:32 PM

திருச்சி: அண்ணா பல்கலை குற்றவாளி தி.மு.க.,வைச் சேர்ந்தவர் என்பது, கட்சியின் பேனர் மற்றும் அமைச்சர்களின் போட்டோக்களின் மூலம் தெரிய வந்துள்ளதாக நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது: அண்ணா பல்கலை வன்கொடுமை சம்பவத்தில் முதலில் 2 பேருக்கு தொடர்பு என்றார்கள். அதன்பிறகு, ஒருத்தர் என்கின்றனர். அண்ணா பல்கலை நிர்வாகிகள் அனுமதியில்லாமல் உள்ளே போக முடியாது என்றால், இவரு எப்படி உள்ளே சென்றார். நேர்மையான அமைப்பு விசாரித்தால் தான் உண்மை தெரிய வரும். மகளிர் ஆணையம் விசாரிப்பதை வரவேற்கிறேன்.
கைதான நபர் தி.மு.க.,வைச் சேர்ந்தவர் என்று அண்ணாமலை வெளியிட வேண்டியதில்லை. அமைச்சர் மா.சுப்ரமணியம் கைதான நபரின் வீட்டில் உட்கார்ந்து சாப்பிடுகிறார். துணை முதல்வர், அமைச்சரோடு அந்த நபர் இருக்கும் போட்டோக்கள் எல்லாம் வெளியாகியுள்ளது. கட்சியின் பேனரில் அவருடைய பெயர் இருக்கிறது. முரசொலியில் அந்த நபரின் பெயர் போட்டு வெளியிட்டு இருக்கிறார்கள். கட்சியில் இருக்காரு, இல்லை. இதுபோன்ற தவறுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
ராமதாஸ், அன்புமணி இடையிலான மோதலை அமைச்சர் தா.மோ. அன்பரசன் விமர்சித்தது மிகவும் இழிவானது. தி.மு.க.,வில் பிரச்னையே இல்லையா? ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் முரண்பாடே இல்லையா? ஊடகத்தில் வெளிவந்ததால் தான் பிரச்னை. இந்த பிரச்னையால் மக்களுக்கு பாதிப்பு இருக்கா? அதனை ஏன் கேலி செய்து பேசணும், எனக் கூறினார்.

