இன்ஜி., கல்லுாரி பேராசிரியர்களுக்கு அண்ணா பல்கலை புது உத்தரவு
இன்ஜி., கல்லுாரி பேராசிரியர்களுக்கு அண்ணா பல்கலை புது உத்தரவு
ADDED : ஆக 16, 2025 01:52 AM
சென்னை:அண்ணா பல்கலை கீழ் இயங்கும் இன்ஜினியரிங் கல்லுாரிகள், ஒவ்வொரு ஆண்டும் பல்கலையின் அங்கீகாரம் பெற வேண்டியது அவசியம்.
கடந்த ஆண்டு பல கல்லுாரிகள் அங்கீகாரம் பெறுவதற்காக, பேராசிரியர்களின் எண்ணிக்கையை போலியாக காண்பித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, அண்ணா பல்கலை விசாரித்து வருகிறது.
இது போன்ற மோசடிகள் மீண்டும் நடக்காமல் இருக்க, அண்ணா பல்லை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, பல்கலை கீழ் இயங்கும், இன்ஜினியரிங் கல்லுாரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள், தங்களின் ஆதார் விவரங்களை 'ஆன்லைன்' வழியே சமர்ப்பிக்க, அண்ணா பல்கலை அறிவுறுத்தியது. ஆதார் மற்றும் பிற சுய விபரங்களை, பேராசிரியர்கள் சமர்பிக்கும் பணி சமீபத்தில் நிறைவடைந்தது.
இந்நிலையில், ஒவ்வொரு மாதமும் ஆதார் மற்றும் சுய விபரங்களை, பேராசிரியர்கள் இணையதளம் வழியாக பல்கலையிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அவை சரி பார்க்கப்படும் என, அண்ணா பல்கலை அறிவுறுத்தி உள்ளது.