தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மாணவர்களின் உடமைகளை பாதுகாக்க டோக்கன் முறை அண்ணா பல்கலை அறிமுகம்

மாணவர்களின் உடமைகளை பாதுகாக்க டோக்கன் முறை அண்ணா பல்கலை அறிமுகம்

மாணவர்களின் உடமைகளை பாதுகாக்க டோக்கன் முறை அண்ணா பல்கலை அறிமுகம்


UPDATED : நவ 11, 2026 11:09 PM

ADDED : நவ 11, 2026 11:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2026 11:09 PM ADDED : நவ 11, 2026 11:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: செமஸ்டர் தேர்வெழுதும் மாணவர்களின் உடைமைகளை பாதுகாக்க, டோக்கன் முறையை, அண்ணா பல்கலை அறிமுகம் செய்துள்ளது.

சென்னை கிண்டி அண்ணா பல்கலை வளாக கல்லுாரிகளாக, கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லுாரி, சென்னை தொழில்நுட்ப நிறுவனம், கட்டடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி ஆகியவை இயங்கி வருகின்றன.

இந்த கல்லுாரிகளில் படிக்கும், இன்ஜி., மாணவ, மாணவியருக்கான, செமஸ்டர் தேர்வுகள் நடந்து வருகின்றன. தேர்வெழுத வரும் மாணவ, மாணவியரின் உடைமைகளை பாதுகாக்க, டோக்கன் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் தேர்வு அறைக்கு செல்வதற்கு முன்பாக, தொலைபேசி, ஸ்மார்ட் கை கடிகாரங்கள், புளூடூத் சாதனங்கள் உள்ள மின்னனு சாதனங்களை, தங்களின் பைகளில் வைத்து, அவற்றை பாதுகாப்பு அறையில் ஒப்படைக்க வேண்டும் என, பல்கலை அறிவுறுத்தி உள்ளது. பைகளை ஒப்படைக்கும் மாணவர்களுக்கு, ‘டோக்கன்’ வழங்கப்படும். தேர்வு முடிந்தவுடன், உரிய சரிபார்ப்புக்கு பின், அந்த பை, மாணவர்களின் திரும்ப ஒப்படைக்கப்படும் என, பல்கலை தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us