sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அண்ணா பல்கலை பாலியல் வழக்கு; அமைச்சரை விசாரிக்க அண்ணாமலை வலியுறுத்தல்

/

அண்ணா பல்கலை பாலியல் வழக்கு; அமைச்சரை விசாரிக்க அண்ணாமலை வலியுறுத்தல்

அண்ணா பல்கலை பாலியல் வழக்கு; அமைச்சரை விசாரிக்க அண்ணாமலை வலியுறுத்தல்

அண்ணா பல்கலை பாலியல் வழக்கு; அமைச்சரை விசாரிக்க அண்ணாமலை வலியுறுத்தல்

43


ADDED : ஜூன் 03, 2025 12:10 PM

Google News

ADDED : ஜூன் 03, 2025 12:10 PM

43


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தி.மு.க., வட்டச் செயலாளர் கோட்டூர்புரம் சண்முகம் ஆகியோர் விசாரிக்கப்பட வேண்டியவர்கள்'' என பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள வீடியோவில் அண்ணாமலை கூறியிருப்பதாவது: டிசம்பர் 23ம் தேதி, 2024ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிருக்கும் சகோதரிக்கு மிக மோசமான, கோரமான ஒரு பாலியல் வன்கொடுமை நடந்தது நமக்கு தெரியும். 23ம் தேதி நடந்த பாலியல் சம்பவத்திற்கு 25ம் தேதி ஒரு குற்றவாளியை கைது செய்தார்கள். 25ம் தேதி காலையில் இருந்து ஒரு சாமானிய மனிதனாக நானும் பேச ஆரம்பித்தேன்.

call detail record

25ம் தேதி இரவு கைது செய்யப்பட்ட ஞானசேகரன் யார் எந்த கட்சியை சேர்ந்தவன் என்று அதையும் நாங்கள் உங்கள் முன் வைத்தோம். எல்லா அரசியல் கட்சிகளும் போராடினார்கள்.

அரசியல் பேச விரும்பவில்லை. நான் சி.டி.ஆர்., (call detail record) ஆதாரத்தின் அடிப்படையில் பேச போகிறேன். 25ம் தேதி கைது செய்யப்பட்ட பிறகு பல விஷயங்களை பார்த்தோம். எப்.ஐ.சி., கசிய விடப்பட்டது.

30 ஆண்டுகள் கடுங்காவல்

27ம் தேதி நான் ஒரு அறப்போராட்டத்தை முன் எடுத்தேன். சென்னை ஐகோர்ட் சிறப்பு குழு அமைத்து கண்காணித்தது. தற்போது 5 மாதங்களுக்கு பிறகு தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. முக்கிய குற்றவாளியாக, ஒரே குற்றவாளியாக இருக்க கூடிய ஞானசேகரனுக்கு, 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அன்றைக்கு கேட்ட அதே கேள்வியை இன்றும் கேட்கிறோம். ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை வாங்கி கொடுத்தது நம்ம எல்லோருக்கும் சந்தோஷம் தான்.

தொலைபேசி எண்

டிசம்பர் 24ம் தேதி, ஞானசேகரனை கோட்டூர்புரம் போலீஸ் அதிகாரிகள் கைது செய்கிறார்கள். பிறகு வெளியே விட்டு விடுகிறார்கள். 25ம் தேதி மாலை மீண்டும் கைது செய்கிறார்கள். ஏன் கைது செய்த பிறகு விடுதலை செய்தார்கள். இதில் யாரு எல்லாம் சம்மந்தப்பட்டு இருக்கிறார்கள். எதற்காக தி.மு.க.,வில் சில தலைவர்களுக்கு பதற்றம்?

ஆதாரங்களை எங்கு எல்லாம் அழித்து இருக்க வாய்ப்பு இருக்கிறது. 9042977907 என்பது தான் ஞானசேகரன் பயன்படுத்திய தொலைபேசி எண்.

இதையெல்லாம் விசாரித்தார்களா?

சம்பவம் நடந்த அன்று ஞானசேகரன் தொலைபேசி பிளேட் மோடில் இருந்ததாக அரசு வழக்கறிஞர் சொல்லி உள்ளார். 8.52 மணி வரை பிளேட் மோடில் இருந்ததை தான் சி.டி.ஆர்., சொல்கிறது.

பெண்ணை வன்கொடுமை செய்த பிறகு இரவு 8.55 மணிக்கு ஞானசேகரன் முதலில் ஒரு போலீஸ் அதிகாரிக்கு தான் போன் செய்துள்ளார். காவல் துறை மீது நான் அதிக மதிப்பு வைத்து இருக்கிறேன் என்று எல்லோருக்கும் தெரியும். அந்த காவல் துறை அதிகாரி பெயரையும், பதவியையும், மொபைல் எண்ணையும் வெளியிடவில்லை.

5 முறை போனில் பேசியது எதற்கு?

48 மணி நேரம் கழித்து அரசு என்ன பதில் சொல்லும் என்பதை பார்த்து விட்டு வெளியிடுகிறேன். 6 நிமிடம் கழித்து 9.01 மணிக்கு ஞானசேகரனுக்கு மீண்டும் அந்த போலீஸ் அதிகாரி அழைக்கிறார். அந்த போலீஸ் அதிகாரி யார்? அவர் பேசியதை மறைத்தது ஏன்?

குற்றம் செய்த பிறகு போலீஸ் அதிகாரிக்கு ஞானசேகரன் கூறியதை விசாரித்தீர்களா? அண்ணா பல்கலையில் பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த மறுநாள் (டிச.,24ம் தேதி) ஞானசேகரனும், தி.மு.க., வட்டச் செயலாளர் சண்முகமும், 5 முறை போனில் பேசுகின்றனர்.

காலை 7.27 மணிக்கு முதல் அழைப்பு. மாலை 4.01 மணி வரை 5 முறை பேசுகிறார்கள். அதன் பிறகு தான் போலீஸ் ஞானசேகரனை அழைத்துச் செல்கின்றனர். போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும்போது பேசவில்லை. வெளியில் வந்த பிறகு மீண்டும் ஞானசேகரனும் சண்முகமும் பேசுகின்றனர். எதற்கு விடுவித்தனர்?

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தி.மு.க., வட்டச் செயலாளர் கோட்டூர்புரம் சண்முகம் ஆகியோர் விசாரிக்கப்பட வேண்டியவர்கள். 25ம் தேதி மீண்டும் ஞானசேகரனை கைது செய்த பிறகு அண்ணா பல்கலை கேமரா வேலை செய்யவில்லை என போலீசார் சொல்கிறார்கள்.

ஆதாரங்கள் அழிப்பு

டிச.,24ம் தேதி இரவு 8.30 மணிக்கு ஞானசேகரன் கோட்டூர்புரம் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்த பிறகு, தி.மு.க., வட்டச் செயலாளர் கோட்டூர்புரம் சண்முகம் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு போனில் பேசுகிறார். 8.32 மணிக்கு மீண்டும் இருவரும் பேசுகின்றனர். எதற்காக இவ்வளவு பதட்டம்?

அண்ணா பல்கலையில் அதிகாரியாக வேலை பார்க்கும் நடராஜனும், தி.மு.க., வட்டச் செயலாளர் கோட்டூர்புரம் சண்முகமும், குறிப்பிட்ட அந்த 4 நாட்களில் மட்டும் 13 முறை பேசியுள்ளனர். டிச.,24ம் தேதி இரவு தான் முக்கியமான தினம். அன்று தான் ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன.

யார் அந்த சார் என்ற கேள்வியை முதலில் இருந்து கேட்கிறோம். முதல்வருக்கு இரண்டு பொறுப்புகள் இருக்கிறது. 24ம் தேதி பல விஷயங்கள் நடந்து இருக்கிறது. நான் எதற்கு பயப்பட மாட்டேன்.

உடும்பு பிடியாக பிடித்து போக போகிறேன். அண்ணா பல்கலை மாணவியின் சகோதரன் ஆக நான் சாட்டையால் அடித்து கொண்டேன். கேள்விகள் தொடர்ந்து கேட்போம். ஆளும் கட்சியில் யாருக்கு எல்லாம் தொடர்பு இருக்கிறது.

யார் எல்லாம் பதவியை தவறாக பயன் படுத்தி உள்ளனர். போலீசாரின் கையை கட்டி போட்டார்கள். 24ம் தேதி ஞானசேகரனை விடுதலை செய்து ஆதாரங்களை அழிக்க யார் எல்லாம் உடந்தையாக இருந்தார்களோ அவர்களுக்கு குற்றவாளிகள் தான். அதில் யார் அந்த சார் என்பவர் மறைந்து இருக்கிறார்.

இவ்வாறு அண்ணாமலை கூறினார்.






      Dinamalar
      Follow us