தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ அண்ணா பல்கலை மாணவர் டெங்கு காய்ச்சலுக்கு பலி

 அண்ணா பல்கலை மாணவர் டெங்கு காய்ச்சலுக்கு பலி

 அண்ணா பல்கலை மாணவர் டெங்கு காய்ச்சலுக்கு பலி

1


ADDED : செப் 19, 2026 01:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 01:54 AM

1


1
Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை அண்ணா பல்கலை விடுதி மாணவர், டெங்கு பாதிப்பால் பலியான சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலையை சேர்ந்த மாணவர் ஹரிஷ்குமார், 21, சென்னை அண்ணா பல்கலை மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில், இறுதியாண்டு படித்து வந்தார்.

விடுதியில் தங்கியிருந்த அவருக்கு, சில நாட்களுக்கு முன், தீவிர காய்ச்சல் ஏற்பட்டது.

பல்கலையில் உள்ள சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்றார். இருப்பினும், காய்ச்சல் குறையாததால், கிண்டி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரின் நிலை மோசமடைந்ததை தொடர்ந்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும், சிகிச்சை பலன் அளிக்காததால், மாணவர் ஹரிஷ்குமார் நேற்றுமுன்தினம் உயிரிழந்தார். இது, பல்கலை மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அதே மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவை சேர்ந்த மாணவர் ஆனந்த் ராஜ், தீவிர காய்ச்சல் ஏற்பட்டு, கிண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின், சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us