ADDED : நவ 11, 2024 10:33 AM

தஞ்சாவூர்- கடந்த, 2010ம் ஆண்டு, தஞ்சாவூர், பெரிய கோவிலில் ஆயிரமாவது ஆண்டு விழா நடந்தது. அப்போது, தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி நடந்தது. முதல்வராக இருந்த கருணாநிதி, கோவிலுக்குள் நடந்த ஆயிரம் பரதநாட்டிய கலைஞர்களின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை காண வந்தார். அதன் பின், 2011, 2016ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில், தி.மு.க., தோல்வியை சந்தித்தது. கருணாநிதி மீண்டும் பெரிய கோவிலுக்கு வர முடியாமல் போனது. அப்போது விழாவுக்கு வந்த எம்.பி., ராசாவுக்கும், 2 ஜி வழக்கு சிக்கல் உருவானது. பெரிய கோவிலுக்கு வந்து சென்றால்,பதவிக்கு ஆபத்து வருகிறது என இன்றளவும் கருதப்படுகிறது .மேலும், முன்னாள் பிரதமர் இந்திரா, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., போன்றவர்களை உதாரணமாக கூறுகின்றனர்.
இதனால், பெரிய கோவிலில் உள்ளே வருவதை, அமைச்சர்கள், எம்.பிக்கள்., - எம்.எல்.ஏ.,க்கள் என இன்றளவும் மூட நம்பிக்கைக்கும், சென்டிமென்டுக்கும் கட்டுப்பட்டு புறக்கணித்து வருகின்றனர்.
குறிப்பாக, அரசு விழான மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039வது சதய விழா இரண்டு நாட்கள் நிகழ்வில், அமைச்சர்,எம்.எல்.ஏ,எம்.பி., என யாரும் கோவில் உள்ளே எட்டிப் பார்க்கவில்லை.
இந்நிலையில், நேற்று இரவு (10ம் தேதி) நடைபெற்ற, சதய விழாவின் நிறைவு நாள் விழாவில்,பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ., அண்ணாதுரை கலந்து கொண்டார்.
அண்ணாதுரையின் வருகையால் அதிர்ந்து போன மூத்த நிர்வாகிகள் பலரும், பெரிய கோவிலின் சென்டிமென்டை எம் எல் ஏ அண்ணாதுரை உடைத்து விட்டார் என்ற பேச்சுக்கள் எழுந்தது. எம் எல் ஏ அண்ணாதுரை செயல் கடவுள் மறுப்பாளர்கள் என கட்சி தலைமை கூறிக் கொண்டாலும்,சென்டிமென்ட் மூடநம்பிக்கைக்கு கட்டுப்பட்ட தான் இருக்கிறது. அண்ணாதுரையின் பெயரைக் வைத்திருப்பதால் என்னவோ,எம்எல்ஏ அண்ணாதுரை பெரிய கோவிலின் சென்டிமென்டை உடைத்திருப்பதை பலரும் பாராட்டி வருகின்றனர்.