sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 25, 2026 ,பங்குனி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க.,வை அண்ணாதுரை ஆரம்பித்ததே விஜயை பார்த்து தான்: உதயநிதி கிண்டல்

/

தி.மு.க.,வை அண்ணாதுரை ஆரம்பித்ததே விஜயை பார்த்து தான்: உதயநிதி கிண்டல்

தி.மு.க.,வை அண்ணாதுரை ஆரம்பித்ததே விஜயை பார்த்து தான்: உதயநிதி கிண்டல்

தி.மு.க.,வை அண்ணாதுரை ஆரம்பித்ததே விஜயை பார்த்து தான்: உதயநிதி கிண்டல்

30


UPDATED : பிப் 14, 2026 08:32 PM

ADDED : பிப் 14, 2026 08:30 PM

Google News

30

UPDATED : பிப் 14, 2026 08:32 PM ADDED : பிப் 14, 2026 08:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : 'மகளிர் உரிமைத்தொகை ரூ.5 ஆயிரத்தை, தி.மு.க., அரசு கொடுத்தது தன்னால்தான்' என த.வெ.க., தலைவர் விஜய் பேசியதை துணை முதல்வர் உதயநிதி கிண்டல் அடித்துள்ளார்.

மதுரையில், தி.மு.க., இளைஞரணி மாநில ஒருங்கிணைப்பாளர் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதில் பங்கேற்ற, துணை முதல்வர் உதயநிதி அளித்த பேட்டி: மகளிருக்கு உரிமைத்தொகை ரூ.5 ஆயிரம் வழங்கியதால், அவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இது தேர்தலுக்காக கொடுக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில், வழக்கு வரப்போவது குறித்து பலருக்கு தெரியவில்லை. மத்திய பிரதேசத்தில், ஒருமுறை இதேபோன்ற ஒரு திட்டத்தை வழக்கு தொடர்ந்து நிறுத்தினர். தேபோல், தமிழகத்திலும் நிறுத்துவதற்கு, பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும் முயற்சி செய்தன.

இதை உணர்ந்தே, முன்னேற்பாடாக முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். சேலத்தில், விஜய் கூட்டத்தில், ஒருவர் இறந்தது குறித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தான் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, உதயநிதியிடம், 'தன்னால்தான் ரூ.5 ஆயிரத்தை, தி.மு.க., அரசு வழங்கியதாக, த.வெ.க., தலைவர் விஜய் கூறுகிறாரே' என கேள்வி எழுப்பியதற்கு, 'அண்ணாதுரையே, தன்னை பார்த்து தான், தி.மு.க.,வை ஆரம்பித்தார் என்று கூட, விஜய் சொன்னாலும் சொல்வார்' என கிண்டலாக பதிலளித்தார்.






      Dinamalar
      Follow us