ஓட்டுகளை திருடிய தி.மு.க., ஜனநாயகம் பற்றி பேசுகிறது அண்ணாமலை விமர்சனம்
ஓட்டுகளை திருடிய தி.மு.க., ஜனநாயகம் பற்றி பேசுகிறது அண்ணாமலை விமர்சனம்
ADDED : ஆக 12, 2025 04:03 AM
சென்னை: தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை:
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் ஆதாரமற்ற பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் மயங்குவதற்கு பதில், அவரிடம், 'ஓட்டுகளை திருடித்தான், கேரளாவின் வயநாடு மற்றும் உ.பி., ரேபரேலி தொகுதிகளில் வெற்றி பெற்றனரா' என கேட்க வேண்டும்.
வெற்று நாடகம் போடாமல், கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரியின் நோட்டீஸ்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு ராகுலை, ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும்.
தினமும் பொய்களை சொல்லி, உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டு விட்டு, அதன் பிறகும் சிறிதும் வெட்கம் இல்லாமல் சுற்றித் திரிவது ராகுலின் வழக்கம்.
வாக்காளர்களுக்கு பணத்தை வழங்கி, 'திருமங்கலம் பார்முலா' வாயிலாக ஓட்டு திருட்டுக் கலையை உருவாக்கிய கட்சி தி.மு.க., மேலும், வாக்காளர்களை கால் நடைகள் போல் கொட்டகையில் அடைத்து, அவர்களை கொலுசு, பிரஷர் குக்கரால் விலைக்கு வாங்கி, 'ஈரோடு கிழக்கு' பார்முலாவையும் உருவாக்கிய கட்சி தி.மு.க., அந்த கட்சி தற்போது ஜனநாயகம் குறித்து பேசுவது முரண்பாடானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.