UPDATED : அக் 24, 2025 04:36 PM
ADDED : அக் 24, 2025 04:18 PM

சென்னை: மாடுகளுக்கு தீவனம் கொடுப்பது மற்றும் சாணத்தை சுத்தம் செய்யும் பணிகளை செய்யும் அண்ணாமலையின் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவை அருகே இயற்கை விவசாயம் செய்து வருகிறார். கரூர் மாவட்டத்தில் இருக்கும் அவரது பூர்வீக நிலத்திலும் விவசாயம் செய்து வருகிறார். அவரது தோட்டத்தில் ஏராளமான ஆடு, மாடுகள் உள்ளன. ஓய்வு கிடைக்கும் நாட்களில் அவற்றை பராமரிப்பது போன்ற வேலைகளை அண்ணாமலை செய்து வருகிறார்
இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. விவசாய வேலைகளை செய்வது, மாட்டு சாணத்தை அள்ளிச் செல்வது மற்றும் தீவனம் கொடுப்பது போன்ற பணிகளில் அண்ணாமலை ஈடுபட்டுள்ள வீடியோ பேசும் பொருள் ஆகியுள்ளது.
அரசியல் கட்சியினர் பலரும் அவரது வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

