ADDED : அக் 05, 2025 01:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, திடீரென டில்லி சென்றுள்ளார்.
கரூரில், 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் , தி.மு.க., அரசு மீது அண்ணாமலை குற்றஞ்சாட்டினார். பா.ஜ., மேலிடம் அனுப்பிய எம்.பி.,க்கள் குழுவுடனும் நேரில் சென்று ஆய்வு செய்தார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்தபோதும் உடன் சென்றார்.
இந்நிலையில், திடீரென நேற்று காலை, கோவையில் இருந்து டில் லிக்கு அண்ணாமலை புறப்பட்டுச் சென்றார்.
டில்லியில், அமித் ஷா மற்றும் பா.ஜ., தலைவர்களை சந்திப்பார் எனவும் தமிழக அரசியல் சூழல், கரூர் சம்பவம் குறித்து அவர்களிடம் விவரிப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.