ADDED : ஜன 12, 2024 10:05 PM
சென்னை:சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவுகளின் கீழ், 'கவர்னர் விருது - 2023'க்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக சேவை பிரிவில் நிறுவனங்களுக்கான தேர்வில், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அமைப்பு நிறுவனம்; தனி நபர் தேர்வில், திருவண்ணாமலை மதன் மோகன், சென்னை குபேந்திரன், தேனி ரஞ்சித்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவில் நிறுவனங்களுக்கான தேர்வில், மதுரை, 'பசுமை அமைதி காதலன்' நிறுவனம்; தனி நபர் தேர்வில், தர்மபுரி தாமோதரன், திருநெல்வேலி முத்துகிருஷ்ணன், விருதுநகர் தலைமலை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
தேர்வு செய்யப்பட்ட நிறுவனத்திற்கு, 5 லட்சம் ரூபாய் மற்றும் பாராட்டு சான்றிதழ்; தனி நபர்களுக்கு, 2 லட்சம் ரூபாய் மற்றும் பாராட்டு சான்றிதழ், குடியரசு தினத்தன்று, கவர்னர் மாளிகையில் நடக்கும் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சியில், கவர்னரால் வழங்கப்படும்.