பாலமுருகனடிமை சுவாமிக்கு திருவள்ளுவர் விருது அறிவிப்பு
பாலமுருகனடிமை சுவாமிக்கு திருவள்ளுவர் விருது அறிவிப்பு
ADDED : ஜன 13, 2024 12:34 AM
சென்னை:தமிழக அரசு சார்பில், தமிழ் மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கு தொண்டாற்றுவோருக்கு, விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
பள்ளி மாணவர்களுக்கு, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கி வரும் பாலமுருகனடிமை சுவாமிக்கு, 2024ம் ஆண்டுக்கான, 'திருவள்ளுவர் விருது' அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல, பத்தமடை பரமசிவத்திற்கு, 2023ம் ஆண்டுக்கான, அண்ணா விருது; காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பலராமனுக்கு, காமராஜர் விருது; கவிஞர் பழனிபாரதிக்கு, மகாகவி பாரதியார் விருது.
கவிஞர் முத்தரசுக்கு, பாரதிதாசன் விருது; பேராசிரியர் ஜெயசீல ஸ்டீபனுக்கு, திரு.வி.க., விருது; இரா.கருணாநிதிக்கு, கி.ஆ.பெ.விசுவநாதம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விருது தொகையாக, 2 லட்சம் ரூபாய், 1 சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கப்படும்.
சமூக நீதி விருது: தமிழக அரசு சார்பில், 2023ம் ஆண்டு சமூக நீதிக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
சமூக நீதிக்கான பெரியார் விருதுக்கு, சமூக நீதி கண்காணிப்பு குழு தலைவர் சுப.வீரபாண்டியன்; அம்பேத்கர் விருதுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருவருக்கும் இன்று, முதல்வர் ஸ்டாலின் விருதுகளை வழங்க உள்ளார்.