நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: சுந்தராபுரம், ராமலிங்க நகரிலுள்ள வலம்புரி விநாயகர் கோவிலில், 35ம் ஆண்டு விழா மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது.
விழா, கடந்த ஒன்றாம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டன. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மூன்று நாட்கள் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. நிறைவு நாளன்று, இன்னிசை கச்சேரி நடந்தது. விழாவையொட்டி, பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒன்பதரை அடி உயர சிங்க விநாயகர் சிலை விசர்ஜனம் செய்யப்பட்டது. எம்.எல்.ஏ., தாமோதரன், தெற்கு மாவட்ட பா.ஜ., செயலாளர் முருகேசன், பொறுப்பாளர்கள் மனோகரன், கமல்பாலன், இந்து முன்னணி பொறுப்பாளர்கள் ஜீவானந்தம், வெற்றிவேல் உள்பட பலர் பங்கேற்றனர். நகர பா.ஜ., செயலாளர் நாகராஜ் நன்றி கூறினார்.