சமூக நலத்துறை நலத்திட்டங்களுக்கு ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்வு
சமூக நலத்துறை நலத்திட்டங்களுக்கு ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்வு
UPDATED : ஏப் 02, 2025 02:43 AM
ADDED : ஏப் 02, 2025 01:35 AM
கோவை:சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களுக்கு, குடும்பத்தின் வருவான உச்சவரம்பு, ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசாணையில் கூறியிருப்பதாவது:
சமூகத்தில் மிகவும் பின் தங்கியுள்ள, பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டினை உறுதி செய்யும் நோக்கில், சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கான, ஆண்டு குடும்ப வருவாயின் உச்ச வரம்பு, 72 ஆயிரம் ரூபாயிலிருந்து, 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சமூகநலத்துறையின் கீழ், செயல்படுத்தப்படும் திருமண நிதியுதவி திட்டங்களில், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவித்திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவி திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டம் ஆகிய, மூன்று திருமண நிதி உதவி திட்டங்களுக்கும், வருமான உச்சவரம்பு ஏற்கனவே முற்றிலும் நீக்கப்பட்டு விட்டது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

