கிட்னி திருட்டு வழக்கில் மேலும் ஒரு புரோக்கர் கைது
கிட்னி திருட்டு வழக்கில் மேலும் ஒரு புரோக்கர் கைது
ADDED : டிச 19, 2025 04:51 AM
பள்ளிப்பாளையம்: நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி, கிட்னி புரோக்கர்கள் ஆனந்தன், ஸ்டான்லி மோகன் ஆகியோர் பணத்தாசை காட்டி, போலி ஆவணங்கள் தயார் செய்து, தொழிலாளர்களின் கிட்னியை விற்க வைத்துள்ளனர்.
கடந்த ஜூலையில், இந்த விவகாரம் வெளியே தெரிந்தவுடன், புரோக்கர்கள் தலைமறைவாகினர். கிட்னி திருட்டு வழக்குகளை விசாரிக்க, தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் நான்கு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கொண்ட விசாரணை குழு அமைக்க, ஆகஸ்டில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
சிறப்பு புலனாய்வு குழுவினர், புரோக்கர்கள் ஆனந்தன், மோகனை கைது செய்தனர். வழக்கில் தொடர்புள்ள முத்துசாமி, ஜோதீஸ்வரன் ஆகிய இருவரை கடந்த மாதம் கைது செய்தனர். ஈரோடு கார்த்திகேயன், 45, என்பவரை சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று கைது செய்தனர்.

