sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அடுத்த அநாகரிகம்; அண்ணாமலையிடம் பதக்கம் வாங்க மறுத்த அமைச்சர் மகன்

/

அடுத்த அநாகரிகம்; அண்ணாமலையிடம் பதக்கம் வாங்க மறுத்த அமைச்சர் மகன்

அடுத்த அநாகரிகம்; அண்ணாமலையிடம் பதக்கம் வாங்க மறுத்த அமைச்சர் மகன்

அடுத்த அநாகரிகம்; அண்ணாமலையிடம் பதக்கம் வாங்க மறுத்த அமைச்சர் மகன்

140


UPDATED : ஆக 26, 2025 09:06 AM

ADDED : ஆக 26, 2025 07:53 AM

Google News

140

UPDATED : ஆக 26, 2025 09:06 AM ADDED : ஆக 26, 2025 07:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே நடந்த மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மகன் சூரியராஜபாலு, பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அணிவித்த பதக்கத்தை கழுத்தில் வாங்காமல் அவமதித்து, கையில் பெற்று சென்றார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரங்குடிபட்டியில், தமிழ்நாடு துப்பாக்கி சங்கம் மற்றும் புதுக்கோட்டை ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியவை இணைந்து, மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியை நடத்தி வருகின்றன.

கடந்த 22ல் துவங்கிய போட்டிகள், 28 வரை நடக்கின்றன. நேற்று நடந்த போட்டியின் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை அழைக்கப்பட்டிருந்தார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் அணிவித்து, பாராட்டு தெரிவித்தார்.

துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மகன் சூரியராஜபாலுவும், அண்ணாமலை கையால் பதக்கம் வாங்க மேடைக்கு வந்தார். அப்போது அண்ணாமலை பதக்கத்தை, சூரியராஜபாலு கழுத்தில் அணிவிக்க முயன்றார். அப்போது, அண்ணாமலை கையை தடுத்தார் சூரியராஜபாலு.

'கையில் வேண்டுமானால் கொடுங்கள் வாங்கிக் கொள்கிறேன். என் கழுத்தில் பதக்கத்தை நீங்கள் அணிவிக்க வேண்டாம்' என்று சொன்ன சூரியராஜபாலு, பதக்கத்தை கையில் வாங்கிக் கொண்டார்.

இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அண்ணாமலை அப்செட் ஆனார். ஆனாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் சுதாரித்தார். சூரியராஜபாலுவை நிர்ப்பந்தப்படுத்தாமல், பதக்கத்தை கையில் கொடுத்து விட்டு, பக்கத்தில் நிற்க வைத்து போட்டோ எடுத்துக் கொண்டு அனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்வை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

சமீபத்தில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழாவில், கவர்னர் ரவி கையால் பட்டம் வாங்க, நாகர்கோவில் தி.மு.க., நிர்வாகியின் மனைவி மறுத்த சம்பவம் அரங்கேறியது. இந்நிலையில், அடுத்த சம்பவமாக ஆவாரங்குடிபட்டி சம்பவம் அரங்கேறி உள்ளது.

தம்பி நல்லா இருக்கணும்!

இது குறித்து நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: அண்ணா அது ஒன்னும் இல்லைங்க அண்ணா. அந்த தம்பி நல்லா இருக்கணும். எங்கு இருந்தாலும் கூட சிறப்பாக இருக்க வேண்டும். நான் பார்த்தேன். அது அவருடைய இஷ்டம். அவர் யார் கையில் பதக்கம் வாங்க வேண்டும். யார் கையில் வாங்க கூடாது என்பது ஒவ்வொரு மனிதருடைய இயல்பு.
என்னை பொறுத்தவரை டிஆர்பி ராஜாவின் மகன் எங்கு இருந்தாலும் கூட சிறப்பாக இருக்கணும். இந்த துறையில் சாதனை பண்ணணும். ஒரு பெரிய மனிதராக வளர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அது என் கையில் பதக்கம் வாங்க வேண்டும், வாங்கவில்லை, வாங்குவதற்கு மறுத்துவிட்டார், இன்னொருவர் கையில் வாங்கினார் என்பது முக்கியமில்லை அண்ணா. நல்ல மனிதராக வர வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.








      Dinamalar
      Follow us