sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆவண எழுத்தர் தேர்வுக்கு வயது வரம்பு; அரசின் இன்னொரு அநீதி: ராமதாஸ் குற்றச்சாட்டு!

/

ஆவண எழுத்தர் தேர்வுக்கு வயது வரம்பு; அரசின் இன்னொரு அநீதி: ராமதாஸ் குற்றச்சாட்டு!

ஆவண எழுத்தர் தேர்வுக்கு வயது வரம்பு; அரசின் இன்னொரு அநீதி: ராமதாஸ் குற்றச்சாட்டு!

ஆவண எழுத்தர் தேர்வுக்கு வயது வரம்பு; அரசின் இன்னொரு அநீதி: ராமதாஸ் குற்றச்சாட்டு!

3


ADDED : ஆக 26, 2024 12:17 PM

Google News

ADDED : ஆக 26, 2024 12:17 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் 26 ஆண்டுகளாக நடத்தப்படாத ஆவண எழுத்தர் உரிமத் தேர்வை வயது வரம்பு இல்லாமல் உடனடியாக அரசு நடத்த வேண்டும் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் ஆவணங்களை தயாரித்து வழங்குவதற்கான ஆவண எழுத்தர் உரிமம் வழங்குவதற்கான தேர்வுகள் 1998ம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 26 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. ஆவண எழுத்தர் உரிமம் பெறுவதற்கான தகுதியும், அனுபவமும் பெற்ற 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்வுக்காக காத்திருக்கும் நிலையில், அதை நடத்த தமிழக அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாதது கண்டிக்கத்தக்கது.

ஆவண எழுத்தர்


தமிழகத்தில் கடைசியாக 1998ம் ஆண்டில் ஆவண எழுத்தர் உரிமத் தேர்வு நடத்தப்பட்ட பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதன் பயனாக சார்பதிவாளர் அலுவலகங்களின் எண்ணிக்கை 589 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்களில் எண்ணிக்கை 5,141 ஆகவே உள்ளது. இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வேறு பணி, வயது முதிர்வு, உயிரிழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இப்போது பணி செய்யவில்லை. அதனால் ஒரு பதிவாளர் அலுவலக எல்லையில் சராசரியாக ஐந்துக்கும் குறைவாக ஆவண எழுத்தர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர்.

காரணம் என்ன?


தமிழ்நாட்டில் அண்மைக்காலங்களில் பதிவு செய்யப்படும் சொத்து மற்றும் பிற ஆவணங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஆனால், அவற்றை எழுதித் தரும் அளவுக்கு ஆவண எழுத்தர்களின் எண்ணிக்கை உயரவில்லை. அதற்கு காரணம் குறிப்பிட்ட இடைவெளியில் ஆவண எழுத்தர் உரிமத் தேர்வுகள் நடத்தப்படாதது தான். போதிய எண்ணிக்கையில் ஆவண எழுத்தர்கள் இல்லாததால் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, அரசுக்கு வரவேண்டிய வருவாயும் குறைகிறது. ஆவண எழுத்தர் உரிமத் தேர்வுகளை நடத்தி உரிமம் வழங்குவதால் அரசுக்கு எந்த செலவும் ஏற்படாது. ஆனாலும், ஆவண எழுத்தர் உரிமத் தேர்வுகளை நடத்த தமிழக அரசு தயங்குவதற்கான காரணம் தெரியவில்லை.

அநீதி


ஆவண எழுத்தர்களின் பற்றாக்குறையை உணர்ந்து கொண்ட தமிழக அரசு, அதற்கான தேர்வு விரைவில் நடத்தப்படும்; பத்திரப் பதிவுத்துறை தலைவர் அலுவலகம் மூலம் இந்தத் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த 2022ம் ஆண்டில் அறிவித்தது. ஆனால், அதன்பின் இரு ஆண்டுகள் ஆகியும் அந்தத் தேர்வு நடத்தப்படவில்லை. அதை விட தமிழக அரசு செய்துள்ள இன்னொரு பெரிய அநீதி ஆவண எழுத்தர் தேர்வில் பங்கேற்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பு தான். 26 ஆண்டுகளாக ஆவண எழுத்தர் உரிமத் தேர்வுகள் நடத்தப்படாத நிலையில், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான அதிகபட்ச வயது 35 ஆகவும், பிற வகுப்பினருக்கான வயதுவரம்பு 33 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பயன் கிடைக்காது


ஆவண எழுத்தர் உரிமத்திற்காக காத்திருப்பவர்களின் குறைந்தபட்ச வயதே 40 ஆகும். அவர்களில் பலர் 55 வயதைக் கடந்து விட்டனர். இத்தகைய சூழலில் அதிகபட்சம் வயது 33 மற்றும் 35 என நிர்ணயிக்கப்பட்டிருப்பதன் மூலம், ஆவண எழுத்தர் உரிமத்திற்காக காத்திருக்கும் எவருக்கும் பயன் கிடைக்காது.

எனவே, அனைத்துத் தரப்பினரின் நன்மை கருதி தமிழ்நாட்டில் ஆவண எழுத்தர் உரிமத்திற்கான தேர்வை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்; அதுமட்டுமின்றி, ஆவண எழுத்தர் உரிமத் தேர்வுக்கான வயது வரம்பை நீக்க வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us