ADDED : ஜூலை 25, 2025 02:18 AM
பல்லடம்: ''நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இன்னொரு மக்கள் நீதி மய்யம் ஆகி விடும்,'' என, பல்லடத்தில், ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.
முருக பக்தர்கள் மாநாடு மாநில அளவில் ஒரு மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுபோல், மாநில அளவிலான சிவ பக்தர்கள் மாநாடு திருவண்ணாமலையில் நடத்தப்படும்.
அதில், 18 அடி உயர ருத்ராட்சத்தால் ஆன சிவலிங்க திருமேனிக்கு வழிபாடு நடக்கும். 'வெல்லும் தமிழகம்' என்ற தலைப்பில், 'மத்தியில் மோடி; மாநிலத்தில் பழனிசாமி' என்ற நோக்கத்துடன், 234 தொகுதிகளிலும் யாத்திரை நடத்த உள்ளோம். ஆனால், அதை நடத்தக் கூடாது என்பதில் போலீசார் முனைப்புடன் உள்ளனர்.
அரசு அதிகாரிகளை பயன்படுத்தி, கட்சியை வளர்ப்பதற்காகவே மக்களுடன் ஸ்டாலின் முகாமை தி.மு.க., நடத்துகிறது.
விஜய் கட்சி, இன்னொரு மக்கள் நீதி மய்யம் ஆகும். தி.மு.க.,வினர் ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு நடிகரை கொண்டு வருவர். அவ்வாறு, பா.ஜ., - அ.தி.மு.க.,வுக்கு ஓட்டுகள் போய்விடக் கூடாது என்பதற்காக, த.வெ.க., உருவாக்கப்பட்டுள்ளது. தி.மு.க., உருவாக்கிய ம.நீ.ம., கட்சி தலைவர் கமல், தற்போது, ராஜ்யசபா எம்.பி., ஆகி விட்டார். அதுபோல், நடிகர் விஜயும், குறிப்பிட்ட ஓட்டு சதவீதத்தை பெற்று, தி.மு.க.,வில் ஐக்கியமாகி விடுவார்.
இவ்வாவறு அவர் கூறினார்.