அன்பழகன், சேகர், ஷெரீப், மாமுண்டி சேலம் சிறையில் அடைப்பு
அன்பழகன், சேகர், ஷெரீப், மாமுண்டி சேலம் சிறையில் அடைப்பு
ADDED : ஆக 26, 2011 12:59 AM
முன்னாள் அமைச்சர் நேரு உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்ட நில அபகரிப்பு மற்றும் கொலை மிரட்டல் வழக்கில் தொடர்புடைய, திருச்சி துணை மேயர் அன்பழகன் உள்ளிட்ட மேலும் நான்கு பேரை, போலீசார் கைது செய்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் நேரு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதே புகாரில் சிக்கியுள்ள தி.மு.க., நிர்வாகி குடமுருட்டி சேகர், அ.தி.மு.க., பிரமுகர் ஷெரீப், பந்தல் கான்ட்ராக்டர் மாமுண்டி ஆகிய மூன்று பேரையும் மதியம் 12 மணியளவில் போலீசார் கைது செய்தனர்.
வழக்கில் உள்ள துணை மேயர் அன்பழகன், ஒரு மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்தார்.
நேற்று மாலை 4.15 மணிக்கு, மாநகராட்சி அலுவலகத்தின் பின்புறமுள்ள தன் வீட்டுக்கு வந்தார். 4.50 மணிக்கு, அவரை போலீசார் சாவகாசமாக கைது செய்தனர். அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.