தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/லஞ்ச ஒழிப்பு ‘ரெய்டு’ நிறைவு ரூ.1 லட்சம் குறித்து விசாரணை

லஞ்ச ஒழிப்பு ‘ரெய்டு’ நிறைவு ரூ.1 லட்சம் குறித்து விசாரணை

லஞ்ச ஒழிப்பு ‘ரெய்டு’ நிறைவு ரூ.1 லட்சம் குறித்து விசாரணை


ADDED : அக் 24, 2026 07:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2026 07:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட, 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், நேற்று (அக்.,23) மாலை சோதனை மேற்கொண்டனர். நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சுபாஷினி, ஆய்வாளர் பிரபு தலைமையில் வந்த, 10 போலீசார், அலுவலகத்தில் உள்ள அனைத்து பிரிவு அலுவலர்களையும் ஒரே இடத்தில் அமர வைத்து முகவரி, மொபைல் விபரங்களை பெற்றனர்.

நேற்று மதியம், 3:00 மணிக்கு தொடங்கிய சோதனை, விசாரணை, இன்று (அக்.,24) அதிகாலை, 4:00 மணி வரை நடந்தது. மொத்தம், 70 பேரிடம் நடந்த விசாரணையில், 27,000 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், முன்னாள் கவுன்சிலர் ஒருவரின், 17,000 ரூபாயும் அடங்கும். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பெண்ணின் மொபைலில், யு.பி.ஐ., பணப்பரிவர்த்தனை மூலம், ஒரு லட்சம் ரூபாய் வந்தது குறித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us