ADDED : ஜூன் 24, 2026 05:19 AM

சென்னை: டாக்டர்களின் திறனை மேம்படுத்த, 'அப்பல்லோ கிளினிக்கல் சீரிஸ்' புத்தகங்கள், நேற்று வெளியிடப்பட்டன.
அப்பல்லோ மருத்துவ குழுமம், புதிய மருத்துவ கல்வி முன்முயற்சியாக, 'அப்பல்லோ கிளினிக்கல் புக் சீரிஸ்' என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. டாக்டர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், ஆறு புத்தகங்களை, அப்பல்லோ மருத்துவ குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி, சென்னையில் நேற்று வெளியிட்டார்.
இதயம், சிறுநீரகம், மார்பக புற்றுநோய், பக்கவாதம், உடல் பருமன், சர்க்கரை நோய் ஆகியவற்றுக்கான சிகிச்சை தொடர்பான, ஆறு ஆங்கில புத்தகங்கள் வெளியிடப்பட்டன. அவற்றை வெளியிட்டு, டாக்டர் பிரதாப் சி ரெட்டி பேசியதாவது:
நோயாளிகளின் பராமரிப்பை மேம்படுத்துவதுடன், வளர்ந்து வரும் மருத்துவ நடைமுறைகள் மற்றும் புதிய சிகிச்சை முறைகள் குறித்த, சமகால நுண்ணறிவுகளை, டாக்டர்களுக்கு வழங்கும் வகையில், இப்புத்தகங்களில் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
சிறந்த அறிவாற்றல் கொண்ட சுகாதார நிபுணர்கள் தான், நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சையை வழங்க முடியும். அதனால், மருத்துவ துறையில், அன்றாட மாற்றங்களை, டாக்டர்கள் அறிந்து கொள்வது அவசியம். இந்த அப்பல்லோ கிளினிக்கல் புக் சீரிஸ், புதிய சிகிச்சை மற்றும் தொழில்நுட்பம், நுணுக்கங்களை, மருத்துவ துறையினர் கற்றுக் கொள்ள உதவும்.
இவ்வாறு அவர் பேசினார்
