திருமணத்துக்கு முன்பே ரேஷன் கார்டு கோரி விண்ணப்பம்
திருமணத்துக்கு முன்பே ரேஷன் கார்டு கோரி விண்ணப்பம்
ADDED : ஜூலை 13, 2011 12:59 AM
ராமநாதபுரம் : திருமணம் நிச்சயிக்கப்பட்ட உடனே, தாலுகா அலுவலகத்தில், ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
ரேஷன் கார்டு பெற, திருமணம் முடிந்து சில மாதங்கள் கழித்துதான் விண்ணப்பித்து வந்தனர். கடந்த ஆட்சியில் ரேஷன் கார்டுக்கு இலவச 'டிவி' என்பதால், புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பது அதிகரித்தது. தற்போது, இலவச அரிசி, மிக்சி, கிரைண்டர், பேன் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தாலுகா அலுவலகத்தில், புதிய கார்டுக்கான விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. ஏற்கனவே வாரத்துக்கு, 150 விண்ணப்பங்கள் வந்த நிலையில், தற்போது தினமும், 150 விண்ணப்பங்கள் வரத்தொடங்கியுள்ளன. இதில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட உடனே, பெண் வீட்டாரும், மணமகன் வீட்டாரும் போட்டோ, பெயர் நீக்கல் சான்றுடன் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து வருகின்றனர்.