மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்ப படிவம்: தமிழக அரசு வெளியீடு
மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்ப படிவம்: தமிழக அரசு வெளியீடு
UPDATED : ஜூலை 08, 2023 07:27 PM
ADDED : ஜூலை 08, 2023 07:25 PM
சென்னை: மகளிருக்கான ரூ.1000 உரிமை தொகை பெறும் திட்டத்திற்கான விண்ணப்படிவத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
![]() |
மகளிர் உரிமை தொகை யார், யாருக்கு கிடைக்கும் கிடைக்காது என்பது குறித்து தமிழக அரசு செய்தி குறிப்பை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்படிவத்தை வெளியிட்டுள்ளது.
விண்ணப்ப படிவத்தில் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் வயது தொழில் , மாத வருமானம் வருமானவரி வங்கி, ஆதார் எண், குடும்ப அட்டை எண் உள்ளிட்ட 13 கேள்விகள் விண்ணப்ப படிவத்தில் இடம் பெற்றுள்ளன.
மேலும் தொலைபேசி எண், வசிப்பது சொந்தவீடா வாடகை வீடா என்றவிவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. சொத்து விவரங்கள் நிலை உடைமை, வாகனவிவரங்களும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
![]() |
மேலும் உரிமை தொகைக்கு விண்ணப்பிப்போர் ஆதார் அட்டை , குடும்ப அட்டை, மின் கட்டண அட்டை மற்றும் வங்கி பாஸ் புத்தகம் உள்ளிட்டவை விண்ணப்பிக்கும் முகாமிற்கு எடுத்துவர வலியுறுத்தப்பட்டு உள்ளது.


