UPDATED : ஏப் 22, 2025 04:09 AM
ADDED : ஏப் 22, 2025 04:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: இந்திய விமான நிலைய ஆணையம், விமான தகவல் கட்டுப்பாட்டுப் பிரிவில், இளநிலை அதிகாரிகளுக்கான பணியிடங்களை நிரப்ப உள்ளது.
விமான நிலையங்களில், ஏ.டி.சி., எனப்படும், விமான போக்குவரத்து தகவல் கட்டுப்பாட்டு கோபுரம் செயல்படுகிறது. இங்கிருந்து தான் விமான இயக்கங்கள் செயல்படும். இந்நிலையில், விமான நிலைய ஆணையம், ஏ.டி.சி., இளநிலை அதிகாரிகளுக்கான காலிப் பணியிடங்களை அறிவித்துள்ளது. அதன்படி நாடு முழுதும், 309 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கு பி.எஸ்சி., வேதியியல், கணிதம் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். வயது 27க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க, 25ம் தேதி கடைசி நாள். கூடுதல் விபரங்களை www.aai.aero இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.