மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்திற்கு உறுப்பினர்கள் நியமனம்
மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்திற்கு உறுப்பினர்கள் நியமனம்
ADDED : டிச 14, 2025 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்திற்கு, புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரிய அமைப்பு விதிகள்படி, வாரியத்திற்கு புதிதாக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில், அரசு சார்ந்த உறுப்பினர்களாக நான்கு அதிகாரிகளும், அரசு சாராத உறுப்பினர்களாக 22 பேரும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
அதாவது, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் அனுபவம் பெற்ற சமூக சேவகர், மருத்துவர், கல்வியாளர், தன்னார்வ பிரதிநிதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், அரசு சாராத உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாரியம், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள், கல்வி, வேலை வாய்ப்பு, மறுவாழ்வு மற்றும் சமூக பாதுகாப்பு தொடர்பான முடிவுகளை எடுக்கும்.

