ADDED : பிப் 14, 2026 07:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் தேதி, மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் உள்ளார். அவருக்கு உதவியாக, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த சிவஞானம், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மின்னாளுமை முகமை இணை தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஸ்ருதன் ஜெய் நாராயணன், இணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசாணையை, தமிழக அரசின் தலைமைச் செயலர் முருகானந்தம் வெளியிட்டுள்ளார்.

