UPDATED : ஏப் 02, 2024 05:19 PM
ADDED : ஏப் 02, 2024 01:15 AM

தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும், வரும் 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. வேட்பாளர் செலவுகளை கண்காணிக்க, தொகுதிக்கு இரண்டு செலவின பார்வையாளர்கள், சில தொகுதிகளுக்கு ஒருவர் என, மொத்தம் 58 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மாநில செலவின பார்வையாளர் நியமனம்
அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் முகாமிட்டு, தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், அவர்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க, மாநில தேர்தல் செலவின பார்வையாளராக, கேரளாவைச் சேர்ந்த ஐ.ஆர்.எஸ்., அதிகாரி பாலகிருஷ்ணன், தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று, சென்னை தலைமை செயலகத்தில், தொகுதி வாரியாக நியமிக்கப்பட்டுள்ள செலவின பார்வையாளர்கள், வருமான வரி, கலால் துறை, வணிக வரித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

