தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் அப்ரன்டிஸ்ஷிப் தொழிலாளர்கள் போராட்டம்

டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் அப்ரன்டிஸ்ஷிப் தொழிலாளர்கள் போராட்டம்

டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் அப்ரன்டிஸ்ஷிப் தொழிலாளர்கள் போராட்டம்


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 06:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 06:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராயக்கோட்டை: ராயக்கோட்டை அருகே, டாடா எலக்ட்ரானிக்ஸ் அப்ரன்டிஸ்ஷிப் தொழிலாளர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்த வன்னியபுரம் அருகே, ஐபோன் உதிரிபாகங்களை தயாரிக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் (மேரி கோல்டு) நிறுவனம் இயங்குகிறது.

இங்கு, பிரதான் மந்திரி நேஷனல் அப்ரன்டிஸ்ஷிப் சேர்க்கை முகாம், டிகிரி, டிப்ளமோ, ஐ.டி.ஐ., முடித்த இளைஞர்கள், 1,800க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டு பணி வழங்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு மாதந்தோறும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை ஊதியமாக வழங்குகிறது.

அதேபோல், மத்திய அரசு ஒவ்வொரு தொழிலாளிக்கும் மாதந்தோறும் அதிகபட்சம், 4,500 ரூபாய் வரை ஊக்கத்தொகையாக வழங்குகிறது. கடந்த ஆக., மாதம் வரை, தொழிலாளர்களுக்கான ஊக்கத்தொகை, நிறுவனத்தின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அப்பணத்துடன், மாத ஊதியத்தையும் சேர்த்து, தொழிலாளர்களுக்கு டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் வழங்கியது.

கடந்த மாதத்திற்கான, மத்திய அரசின் ஊக்கத்தொகை, நேரடியாக தொழிலாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதை அறியாத டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ஊதியத்துடன், 4,500 ரூபாயையும் சேர்த்து வரவு வைத்தது. தவறு நடந்ததை அறிந்து, அத்தொகையை உடனடியாக டாடா நிறுவனம் பிடித்தம் செய்தது.

தகவல் தெரிவிக்காமல், வங்கி கணக்கிலிருந்து தொகையை பிடித்தம் செய்ததாக கூறி, 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், நேற்று காலை, 11:30 முதல், மதியம், 12:30 மணி வரை, போராட்டத்தில் ஈடுபட்டனர். ராயக்கோட்டை போலீசார் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன அலுவலர்கள் பேச்சு நடத்தி, ஒரு வாரத்திற்குள் பணம் திரும்ப வழங்கப்படும் என்றும், அத்தொகை மாதந்தோறும் குறைந்தளவில் பிடித்தம் செய்யப்படும் எனவும் தெரிவித்தனர். அதனால் போராட்டம் முடிவுக்கு வந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us