ADDED : நவ 24, 2024 02:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:வெகுதுாரம் இயக்கப்படும் அரசு விரைவு பஸ்கள், 3 அல்லது 4 மணி நேர இடைவெளியில், பயணியர் வசதிக்காக, சாலையோர உணவகங்களில் நிறுத்தப்படுகின்றன.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட, 52 உணவகங்களின் பட்டியல், https://www.arasubus.tn.gov.in/motel.php என்ற போக்குவரத்து துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், உணவகங்களின் பெயர், உரிமையாளர்கள் பெயர் மற்றும் முகவரிகள் இடம் பெற்றுள்ளன.