sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இதற்கெதற்கு 90 கோடி; இந்தா பிடி, காப்பி பொடி; அறப்போர் இயக்கம் தடாலடி!

/

இதற்கெதற்கு 90 கோடி; இந்தா பிடி, காப்பி பொடி; அறப்போர் இயக்கம் தடாலடி!

இதற்கெதற்கு 90 கோடி; இந்தா பிடி, காப்பி பொடி; அறப்போர் இயக்கம் தடாலடி!

இதற்கெதற்கு 90 கோடி; இந்தா பிடி, காப்பி பொடி; அறப்போர் இயக்கம் தடாலடி!

26


UPDATED : செப் 15, 2024 09:53 PM

ADDED : செப் 15, 2024 09:41 PM

Google News

UPDATED : செப் 15, 2024 09:53 PM ADDED : செப் 15, 2024 09:41 PM

26


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சம் ஒழிப்பு துறை தூங்கி வழிவதாகக் கூறி, அறப்போர் இயக்கத்தினர் காப்பி பொடியை அனுப்பி வைத்து நூதன முறையில் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் எந்த அரசுத்துறையை எடுத்துக் கொண்டாலும், அதில் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. லஞ்சத்தால் பாதிக்கப்படுபவர்கள் புகார் மூலமாகவும், சமூக வலைதளங்களில் வீடியோவாகவும் பதிவு செய்து இதனை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றனர். அதன்பேரில், லஞ்சம் வாங்கிய எத்தனையோ அதிகாரிகள் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.

இப்படியிருக்கையில், தமிழகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சம் ஒழிப்பு துறையினர் சரியாக செயல்படவில்லை என்றும், செயலிழந்து கிடக்கும் துறைக்கு ஆண்டுக்கு ரூ.90 கோடியை ஒதுக்கலாமா? என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக கடந்த 12ம் தேதி அறப்போர் இயக்கம் தனது வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: மக்கள் பணத்தில் செயல்படும் ஒரு அரசு துறை தங்களுக்கு கொடுக்கப்பட்ட எந்த ஒரு வேலையையும் செய்யாமல் சும்மா இருக்கும் போது மக்களாகிய நாம் தான் கேள்வி கேட்க வேண்டும். கேள்வி கேட்கும் சமுதாயமாக மாறினால் மட்டுமே நம்முடையை குரலுக்கு ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு பயம் வரும். கேள்வி கேட்க வாருங்கள். ஞாயிறு மாலை 5 மணிக்கு அறப்போர் அலுவலகத்தில்,' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், ஊழல் புகார்களை விசாரிக்காமல், ஊழல் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல், ஊழல்வாதிகளை காப்பாற்றும் தி.மு.க., அரசின் லஞ்ச ஒழிப்புத்துறையை தூக்கத்தில் இருந்து எழுப்ப காப்பி கொடுக்கலாம் வாருங்கள் என்றும் அழைப்பு விடுத்திருந்தனர்.

அதன்படி, இன்று ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சம் ஒழிப்பு துறையினருக்கு, காப்பி பொடியை அறப்போர் இயக்கத்தினர் அனுப்பி வைத்தனர். மேலும், செயலிழந்து போன துறைக்கு இத்தனை கோடிகளை ஒதுக்குவதற்கு பதிலாக, ஆக்டிவாக இருக்கும் மக்கள் நலன் சார்ந்த துறைகளுக்கு இந்த நிதியை ஒதுக்கினால் கூட பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர்.

இந்த ஆண்டில் மட்டும் தமிழகம் முழுவதும் வெறும் 72 வழக்குகளும், சென்னையில் வெறும் 4 வழக்குகளை மட்டுமே பதிவு செய்துள்ளது.

கடந்த 6 ஆண்டுகளில் தமிழக அளவில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்குகளின் எண்ணிக்கை விபரம்

2019 - 281 வழக்குகள்

2020 - 249 வழக்குகள்

2021 - 248 வழக்குகள்

2022 - 131 வழக்குகள்

2023 - 141 வழக்குகள்

2024 - 72 வழக்குகள்

சென்னையில் கடந்த 6 ஆண்டுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்குகளின் எண்ணிக்கை விபரம்

2019 - 55 வழக்குகள்

2020 - 49 வழக்குகள்

2021 - 27 வழக்குகள்

2022 - 26 வழக்குகள்

2023 - 18 வழக்குகள்

2024 - 4 வழக்குகள்






      Dinamalar
      Follow us