ADDED : பிப் 27, 2024 11:44 PM
கோவை:கோவை சிங்காநல்லுாரில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியதாவது:
யாரெல்லாம் கட்சிக்கு விசுவாசமாக இருக்கின்றனரோ, அவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. 'யு --- டியூப்' மற்றும் சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல் வருகிறது. அதை பற்றி பேசினால், நமக்கு நேரம் வேஸ்ட்.
அ.தி.மு.க., - தி.மு.க., ஒன்று சேருமா; காங்கிரஸ் - பா.ஜ., ஒன்று சேருமா; அதுபோல தான், என்னை பற்றியும், தங்கமணியை பற்றியும் தகவல் பரப்புகின்றனர். அ.தி.மு.க., நம் தாய் வீடு. அனைவரும் தாய் வீட்டுக்கு தான் வருவர்; யாரும் வெளியே போக மாட்டர்.
மூன்று முதல் நான்கு சதவீதம் வாக்காளர்கள் உள்ள பா.ஜ.,வில் நாம் சேரப்போகிறோம் என்று கூறினால், அதற்கு பதில் கூற வேண்டுமா?
தமிழகத்தில், 35 - 40 சதவீதம் ஓட்டு உள்ள கட்சியான அ.தி.முக., இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாம். 'டோன்ட் கேர்' என விட்டுச் செல்லுங்கள்; கவலைப்படாதீர்கள். நம்மை பற்றி தொண்டர்களுக்கு தெரியும்; மக்களுக்கும் தெரியும்.
இவ்வாறு அவர் பேசினார்.

