பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா; சிறப்பு ரயில்கள் என்னென்ன இருக்கு; அறிவித்தது தெற்கு ரயில்வே
பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா; சிறப்பு ரயில்கள் என்னென்ன இருக்கு; அறிவித்தது தெற்கு ரயில்வே
UPDATED : ஜன 12, 2026 02:51 PM
ADDED : ஜன 12, 2026 02:40 PM

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி (ஜனவரி 15) சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:
* சென்னை - நாகர்கோவில்/கன்னியாகுமரி வழித்தடத்தில், இன்று ஜன.,12 முதல் ஜன.,17 வரை, 22 சிறப்பு ரயில்கள் இயக்கம்
* மேட்டுப்பாளையம்- திருநெல்வேலி வழித்தடத்தில் 4 சிறப்பு ரயில்கள் இயக்கம். வண்டி எண்கள் 06029, 06030, 06097, 06098.
* சென்னை - ராமேஸ்வரம் (மானாமதுரை வழி) வழித்தடத்தில் ஜன.,20 (வண்டி எண் 06106) மற்றும் ஜன.,21ம் தேதி (வண்டி எண் 06105) சிறப்பு ரயில்கள் இயக்கம்.
சென்னை டூ மங்களுரு
* சென்னை - மங்களூரு வழித்தடத்தில் ஜன.,13ம் தேதி (வண்டி எண் 06126) சிறப்பு ரயில் இயக்கம்.
* சென்னை - மங்களூரு வழித்தடத்தில் ஜன.,14 தேதி (வண்டி எண் 06125) சிறப்பு ரயில் இயக்கம்.
சென்னை டூ கோவை
* சென்னை - கோவை வழித்தடத்தில் ஜன.,12, 13, 14,15,16,17,18 ஆகிய தேதிகளில் (வண்டி எண் 06034) சிறப்பு ரயில் இயக்கம்.
* சென்னை - கோவை வழித்தடத்தில் ஜன.,12, 13, 14,15,16,17,18,19 ஆகிய தேதிகளில் (வண்டி எண் 06033) சிறப்பு ரயில் இயக்கம்.
* சென்னை - கோவை வழித்தடத்தில் ஜன.,14 தேதி முதல் ஜனவரி 21ம் தே தி வரை (வண்டி எண் 06024) சிறப்பு ரயில் இயக்கம்.
* சென்னை - கோவை வழித்தடத்தில் ஜன.,14 தேதி முதல் ஜனவரி 21ம் தே தி வரை (வண்டி எண் 06023) சிறப்பு ரயில் இயக்கம்.
சென்னை டூ ராமேஸ்வரம்
* சென்னை- ராமேஸ்வரம் வழித்தடத்தில் (வழி- மானா மதுரை) ஜனவரி 13ம் தேதி முதல் ஜனவரி 20ம் தேதி வரை (வண்டி எண் 06106) சிறப்பு ரயில் இயக்கம்.
* சென்னை- ராமேஸ்வரம் வழித்தடத்தில் (வழி- மானா மதுரை) ஜனவரி 14ம் தேதி முதல் ஜனவரி 21ம் தேதி வரை (வண்டி எண் 06105) சிறப்பு ரயில் இயக்கம்.
மேட்டுப்பாளையம் டூ திருநெல்வேலி
* மேட்டுப்பாளையம்- திருநெல்வேலி வழித்தடத்தில் (வழி- பொள்ளாச்சி, மதுரை) ஜனவரி 12ம் (வண்டி எண் 06097) சிறப்பு ரயில் இயக்கம்.
* மேட்டுப்பாளையம்- திருநெல்வேலி வழித்தடத்தில் (வழி- பொள்ளாச்சி, மதுரை) ஜனவரி 13ம் (வண்டி எண் 06098) சிறப்பு ரயில் இயக்கம்.
சபரிமலை சிறப்பு ரயில்கள்
* இதே பொங்கல் சீசனில், சென்னை - திருவனந்தபுரம் வழித்தடத்தில் ஜன.,12 முதல் ஜன.,18 வரை, 12 சபரிமலை சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.
* பெங்களூரு - திருவனந்தபுரம்/கொல்லம் வழித்தடத்தில் ஜன.,12 முதல் 18 வரை, 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
* ஜன.,13ம் தேதி மைசூர் - துாத்துக்குடி (வண்டி எண் 06283), ஜன.,14ல் துாத்துக்குடி - மைசூர் (வண்டி எண் 06284) பொங்கல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
* ஜன.,13 பெங்களூரு -கண்ணுார் (வண்டி எண் 06577), ஜன.,14ல் கண்ணுார் - பெங்களூரு (வண்டி எண் 06578) பொங்கல் சிறப்பு ரயில்கள் இயக்கம்.
சபரிமலை சிறப்பு ரயில்கள்
* இதே பொங்கல் சீசனில், ஜன.,12 முதல் ஜன.,18 வரை, 24 சபரிமலை சிறப்பு ரயில்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.
* ஜன.,14ல் சூரத் - மங்களூரு ஜங்ஷன் சிறப்பு ரயில் (வண்டி எண் 09057), ஜன.,15ல் மங்களூரு ஜங்ஷன் - சூரத் சிறப்பு ரயில் (வண்டி எண் 09058) இயக்கப்படுகின்றன.
வாராந்திர சிறப்பு ரயில்கள்
ஜன.,13 முதல் ஜன.,17 வரை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில்கள்
* ஜன.,17 -03679- தான்பாத் - கோவை
* ஜன.,13- 03680 கோவை - தான்பாத்
* ஜன.,16- 02198- ஜபல்பூர் - கோவை
* ஜன.,12- 02197- கோவை - ஜபல்பூர்
* ஜன.,13- 08539- விசாகப்பட்டினம் - கொல்லம்
* ஜன.,14- 08540- கொல்லம் - விசாகப்பட்டினம்
* ஜன.,12- 02841- ஷாலிமர் - சென்னை
* ஜன.,14- 02842- சென்னை - ஷாலிமர்
* ஜன.,14-08311- சம்பூல்பூர் -ஈரோடு
* ஜன.,16- 08312- ஈரோடு - சம்பல்பூர்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

