இன்பநிதி நண்பர்களுக்காக கலெக்டரை எழ செய்வதா? * பா.ஜ., கண்டனம்
இன்பநிதி நண்பர்களுக்காக கலெக்டரை எழ செய்வதா? * பா.ஜ., கண்டனம்
ADDED : ஜன 16, 2025 07:00 PM
சென்னை:'ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த துணை முதல்வர் உதயநிதி மகன் இன்பநிதியின் நண்பர்களுக்காக, அமர்ந்திருந்த கலெக்டரை எழச் செய்தது மாபெரும் தவறு' என. தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
துணை முதல்வர் உதயநிதி, ஜல்லிக்கட்டு போட்டியை காண அலங்காநல்லுார் சென்றதில் தவறில்லை. அவரின் மகன் இன்பநிதி சென்றதிலும் தவறில்லை. இன்பநிதி தன் நண்பரோடு பின்னால் அமர்ந்து பார்ப்பதாக சொன்னதும் தவறில்லை. ஆனால், ஒரு அமைச்சர், அமர்ந்திருந்த கலெக்டரை எழச் செய்ததோடு, பின்னர் மகனின் நண்பரை, கலெக்டர் அமர்ந்திருந்த இடத்தில் அமரச் செய்தது மாபெரும் தவறு. அவமரியாதையின் உச்சம்.
சுயமரியாதை பேசுபவர்களுக்கு மரியாதை அளிக்க தெரியாதது தான் திராவிட மாடல். உதயநிதியின் அரசியல் முதிர்ச்சியின்மை இந்த சம்பவத்தால் தெளிவாகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.