அரியலுார் - நாமக்கல் ரயில் பாதை சாத்தியக்கூறு ஆய்வு நிறைவு
அரியலுார் - நாமக்கல் ரயில் பாதை சாத்தியக்கூறு ஆய்வு நிறைவு
ADDED : டிச 05, 2025 08:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 'அரியலுாரில் இருந்து பெரம்பலுார் வழியாக நாமக்கல்லுக்கு புதிய ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு பணி முடிந்துள்ளது.
'அடுத்ததாக, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணி மேற்கொள்ளப்படும்' என, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து, அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளதாவது:
அரியலுாரில் இருந்து பெரம்பலுார் வழியாக நாமக்கல் செல்லும் வகையில், புதிய ரயில் பாதைக்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பு பணிகள் முடிந்து உள்ளன.
மொ த்தம், 116 கி.மீ., துாரம் அமையவுள்ள இந்த பாதைக்கான நிலம் தேவை குறித்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்புக்கு பின், ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அதன்பின்னர், இந்த புதிய ரயில் பாதை திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

