உலக செஸ் 'பிளிட்ஸ்' சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றார் அர்ஜுன்
உலக செஸ் 'பிளிட்ஸ்' சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றார் அர்ஜுன்
ADDED : ஜன 01, 2026 02:34 AM

தோகா: கத்தார் தலைநகர் தோகாவில், உலக செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் உலக 'ரேபிட்', 'பிளிட்ஸ்' சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது.
முதலில் 'ரேபிட்' பிரிவு போட்டிகள் நடந்தன. இதன் ஓபன் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் 22, பெண்கள் பிரிவில் இந்தியாவின் கொனேரு ஹம்பி 38, வெண்கலம் கைப்பற்றினர்.
அடுத்து, 'பிளிட்ஸ்' முறையில் (அதிவேகம்) போட்டிகள் நடந்தன. மொத்தம் 19 சுற்று போட்டிகள் நடந்தன. இந்தியாவின் அர்ஜுன், 15.0 புள்ளியுடன் முதலிடம் பிடித்தார். அமெரிக்காவின் பேபியானோ (14.0), ஐந்து முறை உலக சாம்பியன் ஆன நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் (13.5), உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் (13.0) அடுத்த 3 இடம் பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினர்.
இதில் அர்ஜுன், நாடிர்பெக்கிடம் 0.5-2.5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். பேபியானோவை, கார்ல்சன் (3-1) வென்றார். பைனலில் அசத்திய கார்ல்சன் 2.5-1.5 என நாடிர்பெக்கை சாய்த்தார். 'ரேபிட்', 'பிளிட்ஸ்' என இரு பிரிவிலும் 9 வது முறையாக சாம்பியன் ஆனார். அர்ஜுன், பேபியானோவுக்கு வெண்கலம் கிடைத்தது.
இரண்டாவது இந்தியர் உலக 'பிளிட்ஸ்' தொடரில் ஆனந்த், வைஷாலிக்குப் பின் பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் ஆனார் அர்ஜுன்.
* ஆனந்துக்குப் பின், உலக 'ரேபிட்', 'பிளிட்ஸ்' என இரு பிரிவிலும் பதக்கம் வென்றார் அர்ஜுன்.
* உலக 'ரேபிட்', 'பிளிட்ஸ்' என ஒரு தொடரின் இரு பிரிவிலும் பதக்கம் வென்ற 2வது இந்திய வீரர் ஆனார் அர்ஜுன்.

