UPDATED : செப் 23, 2024 12:08 PM
ADDED : செப் 23, 2024 06:14 AM

சென்னை: ரவுடி சீசிங் ராஜா இன்று (செப்.,23) என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். 10க்கும் அதிகமான வழக்குகளில் சிசிங் ராஜா மீது பிடிவாரன்ட் நிலுவையில் உள்ளது.
ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பரான சீசிங் ராஜாவை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் இன்று(செப்.,23) சென்னை நீலாங்கரை அருகே போலீசாரை தாக்கி விட்டு, தப்பிக்க முயன்றார். இதையடுத்து அவரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர்.
யார் இந்த சீசிங் ராஜா?
* ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பரான சீசிங் ராஜா மீது 5 கொலை வழக்கு உட்பட 32 வழக்குகள் உள்ளன. இவரை பல்வேறு வழக்குகளில் போலீசார் வலை வீசி தேடி வந்தனர்.
இணை கமிஷனர் பேட்டி!
ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டரில் நடந்தது என்ன என்பது குறித்து, நிருபர்கள் சந்திப்பில், சென்னை தெற்கு இணை கமிஷனர் சி.பி.,சக்ரவர்த்தி கூறியதாவது: சீசிங் ராஜாவை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
* 10க்கும் அதிகமான வழக்குகளில் சிசிங் ராஜா மீது பிடிவாரன்ட் நிலுவையில் உள்ளது. 30க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன அவரை தேடி வந்தோம்.
* வேளச்சேரி பார் ஊழியரை மிரட்டிய வழக்கில்,சீசிங் ராஜாவை தேடி வந்த நிலையில் ஆந்திராவில் கைது செய்யப்பட்டார்.
* வேளச்சேரி வழக்கில் துப்பாக்கியை பறிமுதல் செய்ய அழைத்து சென்ற போது அவர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். தற்காப்புக்காக போலீசார் சுட்டத்தில் ரவுடி சீசிங் ராஜா உயிரிழந்தார்.
* இவருக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும், தொடர்பு இருப்பதாக தெரிய வில்லை. வழக்கில் கைது செய்தால் குடும்பத்தை விட்டு வீடியோ வெளியிடுவது டிரெண்டாக உள்ளது.
* நாங்கள் விசாரிக்கவே கைது செய்தோம். அவர் தாக்கியதால் தான் என்கவுன்டர் சூழல் உருவானது. இவ்வாறு அவர் கூறினார்.