sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எதிர்கால சவால்களை சமாளிக்க ராணுவம் தயார்: ராணுவ தளபதி

/

எதிர்கால சவால்களை சமாளிக்க ராணுவம் தயார்: ராணுவ தளபதி

எதிர்கால சவால்களை சமாளிக்க ராணுவம் தயார்: ராணுவ தளபதி

எதிர்கால சவால்களை சமாளிக்க ராணுவம் தயார்: ராணுவ தளபதி

2


ADDED : மார் 09, 2026 09:58 PM

Google News

2

ADDED : மார் 09, 2026 09:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார் : ''ராணுவத்தில் மேற்கொள்ளும் தொழில் நுட்ப நடவடிக்கை, இந்தியாவை எதிர்கால சவால் களை எதிர்கொள்ளும் நாடாக மாற்றும்,'' என, ராணுவ தளபதி உபேந்திரா திவேதி தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம், குனனுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு நேற்று ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி வருகை தந்தார்.

இங்கு பயிற்சி பெறும், நட்பு நாடுகளின் முப்படை இளம் பயிற்சி அதிகாரிகளிடையே, இன்று நடந்த கலந்துரையாடலில் பங்கேற்ற ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி பேசியதாவது:நம் நாட்டின் ராணுவம் தற்போது மிக முக்கியமான சீர்திருத்த கட்டத்தில் உள்ளது. வெறும் ஆயுதங்கள் மட்டுமின்றி ராணுவத்தில் கட்டமைப்பு மற்றும் போர் நடத்தும் முறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ராணுவத்தில் மேற்கொள்ளும் தொழில் நுட்ப நடவடிக்கை, இந்தியாவை எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் நாடாக மாற்றும்,'' என்றார்.

மேலும், 'முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் 'தியேட்டரைசன்' எனப்படும் முன்னேற்றம், ராணுவத்தின் வலிமை அதிகரிப்பு, வளர்ந்து வரும் ராணுவ ராஜதந்திரம் மற்றும் நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவம், ராணுவ செயல்பாட்டு திறனை உச்சகட்டத்திற்கு எடுத்து செல்லும், நவீன நடவடிக்கைகள்,' குறித்து விவாதிக்கப்பட்டது.தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சி அதிகாரிகளின் சிறந்த சேவைக்காக பாராட்டு அட்டைகள் வழங்கினார். நிகழ்ச்சியில், ராணுவ பயிற்சி கல்லூரி கமாண்டன்ட் லெப் ஜெனரல் மனீஷ் எரி உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us