விளையாட்டு போட்டிகளை காண ஏற்பாடு கேலோ போட்டிகளை காண ஏற்பாடு
விளையாட்டு போட்டிகளை காண ஏற்பாடு கேலோ போட்டிகளை காண ஏற்பாடு
ADDED : ஜன 18, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை நேரில் காண விரும்புவோருக்கு, பிரத்யேக அனுமதி சீட்டுகள் வழங்க, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
சென்னை, திருச்சி, மதுரை, கோவை மாவட்டங்களில், ஆறாவது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள், நாளை முதல் 31ம் தேதி வரை நடக்க உள்ளன.
நேரில் காண விரும்பும் பார்வையாளர்கள், 'TNSPORTS' என்ற மொபைல் ஆப்ஸ் வழியாகவும், https://www.sdat.tn.gov.in இணையதளம் வழியாக, தங்கள் விபரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
போட்டி நடக்கும் மாவட்டம், விளையாட்டு மற்றும் தேதியை தேர்வு செய்து, பதிவு செய்ய வேண்டும். நேரில் போட்டியை காண்பதற்கு செல்லும்போது, பதிவிறக்கம் செய்த அனுமதி சீட்டை, மொபைலில் அல்லது அச்சிடப்பட்ட தாளில் கொண்டு செல்ல வேண்டும்.