ஸ்ரீரங்கத்தில் ரயில்கள் நிற்கும்: வைகுண்ட ஏகாதசிக்கு ஏற்பாடு
ஸ்ரீரங்கத்தில் ரயில்கள் நிற்கும்: வைகுண்ட ஏகாதசிக்கு ஏற்பாடு
UPDATED : டிச 25, 2025 08:01 AM
ADDED : டிச 25, 2025 05:25 AM
சென்னை: 'வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீரங்கத்தில் நான்கு விரைவு ரயில்கள், தற்காலிகமாக இரண்டு நிமிடங்கள் நின்று செல்லும்' என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில், சில விரைவு ரயில்களுக்கு, தற்காலிகமாக நிறுத்தம் வழங்கப்படுகிறது.
அதன்படி, சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி; தாம்பரம் - கேரள மாநிலம் கொல்லம், எழும்பூர் - துாத்துக்குடி, எழும்பூர் - மதுரை பாண்டியன் விரைவு ரயில்கள் தலா இரண்டு நிமிடங்கள், வரும் 28 முதல் 30ம் தேதி வரை நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சேவையில் மாற்றம் ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, இரண்டு ரயில்களின் சேவையில் 26, 27ம் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை ரயில் கோட்டம் வெளியிட்ட அறிக்கையில் 'திண்டிவனம் அடுத்த, ஒலக்கூர் ரயில்வே யார்டில் மேம்பாட்டு பணி வரும் 26, 27ம் தேதிகளில் நடக்கிறது.
இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
'இதனால், தாம்பரம் - விழுப்புரம் காலை 9:45 மணி பயணியர் ரயில், தொழுப்பேடு வரை மட்டுமே இயக்கப்படும். விழுப்புரம் - கடற்கரை மதியம் 1:40 மணி ரயில், தொழுப்பேட்டில் இருந்து இயக்கப்படும்' என குறிப்பிட்டுள்ளது.

